வெள்ளி, 20 ஏப்ரல், 2012

16-ஆம் காம்பவுண்ட்....7


2010 ஜூலை 27.....

மறுநாள்..... ஸ்வீட்டி தன் கல்லூரியில் தோழி ரொமிளாவிடம் முழுக்க முழுக்க தம் மச்சான் புராணத்தையே பாடிக் கொண்டிருந்தாள்.

ஏப….. எங்க மச்சான் ஒருவழியா நேத்து வீடு வந்து சேந்திட்டாப்ல…..”

யாரு நீ அடிக்கடி சொல்லுவியே உங்க பிரவீண் மச்சானா?”

ஆமயே….. ரொம்ப நாள் கடல்ல கடந்து வந்ததுனால நேத்து எங்க வீடே கள கட்டிப் போச்சுன்னா பாத்துக்கோயேன்….. ஆளு கறுப்பா இருந்தாலும் நல்ல களையா நடிகரு விசாலுகணக்கா வெறப்பா தான் இருக்காப்ல…..”

ஓஹோ….. அப்புடி போவுதா உங்கத….”

இன்னக்கு நேத்தா எங்க மச்சானப் பத்தி உங்கிட்ட பேசுறேன்…… நான் அவருக்குதான்னு எங்க குடும்பமே முடிவு பண்ணிருச்சு…..”

அதெல்லா(ம்) சரிதான் உனக்கு உங்க மச்சான் என்ன வாங்கிட்டு வந்தாப்ல?”

அதாம்ய பாத்துக்க என் நெனப்பே இல்லாம தான் இங்க வந்து இறங்குனாப்ல….. நம்மள பாத்தவுடனே புள்ளயர்க்கு வேற நெனப்பே இல்லாம மாத்தியாச்சுல்ல…..”

அப்ப ஒண்ணுமே வாங்கிட்டு வரலன்னு சொல்லு…..”

இவ ஒருத்தி மனுசி கொஞ்சம் சந்தோசமா இருக்க கூடாதே….. பொத்துகிட்டு வந்திருமே……”

ஏம்ப சடக்குன்னு இப்புடி பேசுற? நான் சும்மா விளாட்டுக்கு தான உன்னய கிண்டல் பண்ணுனேன்…..”

சட்டென்று தன் தவறை உணர்ந்தவளாய் ஸ்வீட்டிசாரி யே…… நானும் படக்குனு உன்னய அப்புடி பேசி இருக்க கூடாது……”

சரி!! அத விடு….. வேற என்ன ஆச்சு?”

எப்பவும் என்னைய ஒருமாறியே பாக்குறாப்லயே……”

ஒருமாறியேன்னா…..?”

பச்சப் பாப்பா….. எல்லாம் வெளக்கமா சொன்னாத்தான் வெளங்குமாக்கும்…..? இன்னக்கு காலேஜுக்கு வர எனக்கு பிடிக்கவேயில்ல அங்க எல்லா(ம்) ஜாலியா இருப்பாக நாமட்டும் இங்க கெடக்கேன்…………….”

அவளது எண்ணம் முழுவதுமாய் பிரவீணே நிரம்பி இருந்தான். அவனைப் பற்றி பேசாமல் அன்று முழுக்க அரைநொடிக் கூட அவளால் இருக்க முடியவில்லை. பாவம் அவளது தோழி ரொமிளாவின் நிலைமை தான்…..

ஸ்வீட்டியும், ரொமிளாவும் பள்ளிக் காலம் தொட்டே நல்ல தோழிகள். இருவரும் அத்தனை ஆத்மார்த்தமாய் இருப்பார்கள். ஸ்வீட்டி தன் எந்த ரகசியங்களையும் தன் தோழியிடமிருந்து மறைத்ததில்லை. ஸ்வீட்டி எப்போதும் தன் மனதில் உள்ளதை படபடவென்று கொட்டி விட்டே யோசிப்பாள் ஆனால் ரொமிளா அப்படி அல்ல….. வயதுக்கு மீறிய நிதானமும் பக்குவமும் அவளிடம் உண்டு. எப்போதும் அவள் தான் ஸ்வீட்டிக்கு அவள் செய்யும் காரியங்களில் உள்ள சாதக பாதகங்களை பிரித்து எடுத்து விளக்கமளிப்பாள்.

ரொமிளாவின் வீடு அந்தோணியார் கோயில் தெருவில் இருந்தது. அவளது குடும்பம் மிகவும் வறுமையானது. அவளது தாய் சேசம்மா ஆப்பம் சுட்டும் வீட்டு வேலைகள் பாத்துமே குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. அவன் ஸ்டீபன்……… பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவர்களது தந்தை ரூபன் ஒரு பெருங்குடிகாரன். எந்த வேலைக்கும் போகாமல் விட்டில் உள்ள பொருட்களை திருடி வித்துக் கொண்டும், மனைவி பிள்ளைகளை அடித்துக் கொண்டுமே எப்போதும் திரிவான். சேசம்மா வேண்டாத தெய்வமில்லை….. போகாத கோயிலில்லை……

ஒரு வருடத்துக்கு முன்னால் ஸ்வீட்டியின் பாட்டி ஜொஸியின் அறிவுறத்தலின் பேரில் அவனை குடியை மறக்க செய்ய மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்றாள். அங்கே ஒருவழியாய் தேத்தி உருட்டி அவனுக்கு சில மாத்திரைகளையும் பரிந்துரைத்து புத்திமதிகளையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஒருமாத காலம் வரை மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு கொஞ்சம் குடியை குறைத்திருந்தான். எல்லாம் சரியாகிவிட்டது என சேசம்மாவின் மனதில் கொஞ்சம் நம்பிக்கை துளிர்விட துவங்கியதும் தான் தாமதம். கொஞ்சம் கொஞ்சமாய் மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டான் ரூபன். ஏனென்றால் அந்த மாத்திரை சாப்பிட்டுவிட்டால் அவனால் குடிக்க முடியவில்லை. இதை அறிந்து கொண்ட சேசம்மா அவனுக்கே தெரியாமல் அவனது சாப்பாட்டில் கலந்து மாத்திரையை கொடுக்கலானாள்.

ஒருநாள் குடித்துவிட்டு தொடர்ந்து இரத்த வாந்தியெடுத்தவன் தான். சேசம்மா பதறி அடித்துக் கொண்டு அவனை ஆஸ்பத்தரிக்கு கொண்டு போகும் வழியிலேயே அவனது உயிர் போயிருந்தது. வீட்டின் நிலை….. தந்தையின் திடீர் மரணம்….. தம்பியின் படிப்பு என எல்லாமும் சேர்ந்து அவளை பக்குவப் படுத்தி இருந்தது.

பிரவீண் தன் வீட்டில் ஜொஸியம்மேவோட கதைத்து கொண்டிருந்த போது……

பிரவீண்…..பிரவீண்………” என வாசலில் ஏதோ பழக்கப்பட்ட குரல் அவனை அழைத்து கொண்டிருந்தது. வெளியில் சென்று பார்த்த போது சாம், ராஜா, ரீகன் மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

சாமின் வீடு…… முன்பு பெரிய காம்பவுண்டில் இருந்தது. தற்போது சின்னக் காம்பவுண்டிற்கு எதிர்தாற்போல் அவர்களுக்கு இருந்த இடத்தில் அரண்மனை போன்று வீடு கட்டி இருக்கிறார்கள். அவனது தந்தை டேவிட் பெரிய மில் அதிபர். அவரது தம்பி ஜாண்சனும் அவரும் அடுத்தடுத்த வீடுகளில் பெரிய காம்பவுண்டில் இருந்தனர். நாடார் சமூகத்தை சார்ந்த சி.எஸ்.ஐ கிறுத்தவர்கள். அவர்தான் அந்த காம்பவுண்டிற்கே ஒருவகையில் பாதுகாவலர் போல்…… ஆள் பலமும் பணபலமும் நிறைந்த மனிதர்….. ஆனால் சக காம்பவுண்ட் வாசிகளிடம் அத்தனை அன்பாய் பழகும் இயல்புடையவர். காம்பவுண்டில் யாருக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் முன்னால் நிற்பவர். முழங்கைக்கும் மேல் மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டையும் அதை துருத்திக் கொண்டு வெளியே தெரியும் தடித்த மைனர் செயினும், பாலிஸ்டர் வேட்டியுமாய் அவரது கம்பீரமான பிம்பத்திற்கு நேர்மாறானது சாமினுடையது. சாந்த சொரூபி….. சிகிரெட் மது என்று எந்த பழக்கமும் இல்லாத அமுல் பேபி. எந்தவிதத்திலும் படோடோபங்களை வெளிப்படுத்தாத எளிமை யாருக்கும் பிடித்து போகும். தன் தந்தையின் மில் தொழிலை தான் அவனும் கவனித்து வந்தான்.

ரீகன்….. அவனது வீடு பெரிய காம்பவுண்டில் உள்ளது. எம்.சி.யே முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பிரவீணை சந்திக்கும் மூன்று நாட்களுக்கு முன்பு வரை வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தந்தை அந்தோணியர் கோயிலுக்கு எதிர்தாற்போல் டூவீலர் ஒர்க்ஸ் வைத்திருக்கிறார். இரண்டு நாட்களாய் குட்டி போட்ட பூனையாய் கடைக்கும் வீட்டுக்குமாய் அலைந்து வருகிறான்.

ராஜாவின் வீடு…… சின்னக் காம்பவுண்டில் பிரவீண் வீட்டுக்கு எதிர் வரிசையில் தான் உள்ளது. மிகவும் வறுமையான குடும்பம். அவனது அப்பாவிற்கு பழைய பொருட்களை வாங்கி கைமாற்றி விடுவதே தொழில். பிரவீணைவிட ராஜா இரண்டு வயது மூத்தவன். சிங்கப்பூரில் வேலை கிடைத்து சென்றவன் லீவுக்கு ஊர் திரும்பியுள்ளான். அவனது அக்காவின் பெயர் லட்சுமி. முதிற் கன்னியானவளுக்கு வறுமையின் காரணமாய் முதலில் வரன்கள் அமையவில்லை….. தற்போது வயது அவளுக்கு பெரும் தடையாய் மாறியுள்ளது.

ராஜாவின் மொத்த குடும்பமும் அந்த ஒற்றை அறை வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். அந்த அறையில் சின்ன தடுப்பெடுத்து சமையலறையாக மாற்றிக் கொண்டனர். அந்த மொத்த வீட்டுக்கான வெளிச்சமும் காம்கவுண்டை பார்த்த வண்ணமுள்ள ஒற்றை ஜன்னல் மூலமாய் தான். அந்த ஜன்னலை ஒட்டி ஒரு கட்டில் போட்டிருப்பார்கள். அந்த கட்டில் போட்டது போக மீதி இடத்தில் இருவர் கட்டிலுக்கு அடியில் கால் நீட்டியபடி படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலும் அந்த ஜன்னல் பூட்டியே இருக்கும் சில நேரங்களில் அந்த ஜன்னல் திறந்திருந்தால் ராஜாவின் அக்கா கட்டிலில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி ஏதோ சிந்தனையில் அமர்ந்திருப்பாள். அதுதான் அவளது வடிகால்………

எல மாப்ள….. எப்ப வந்த?”- சாம்.

நேத்து தான் வந்தன் மாப்ள…..”

வந்தா வீட்டுக்கு வரமாட்டியோல….. மயிறு எயித்த வீட்ட எட்டி பாக்க கூட முடியலயோ?”-ராஜா.

எல நேத்து கனி ஆச்சிவீடு, விமலாத்தா புள்ளங்க வீட்டுக்கு,ஏன் ரீகன் வீட்டுக்குலாம் சாயிந்தரம் போனேன்….. உங்க அம்மாவையும் அக்காவையும் கூட பாத்து பேசுனன்….. நீங்க எவனும் வீட்ல இல்ல நான் என்ன பண்ணடே?”

நீ வுடு மாப்ள….. எல்லாம் நேத்து மத்தியானமே டைட்டாயி…… நம்ம சாமி வீட்ல அவன் பொண்டாட்டி வேற ஊருக்கு போயிருக்கா..... அங்கனையே படுத்தாச்சு…….பெறவு எங்க நீ எங்கள பாக்க…..”-ரீகன்.

எல சாமிக்கு கல்யாணம் ஆயிடுச்சால? அவனுக்கு எவம்ல பொண்ணு குடுத்தான்?”

மாப்ள நீ பேசுனத சாமி கேட்டாம்னு வையி அவன் நாண்டிகிட்டு செத்திருவாம்ல….”-ரீகன்.

சரி! கெளம்பி வால வெளிய போவோம்…. வீட்டுக்குள்ளே கெடந்து முட்ட போடப் போறியோ?”- ராஜா. இரு நான் கிளம்பி வந்திர்றேன் என்றபடி பிரவீண் உள்ளே வீட்டுக்குள் செல்லவும்………

இங்க எவம்ல முட்டையும், கொட்டையும் போடப் போறது?” என்றபடியே ஜொஸி ஆச்சி வெளியே வந்தாள். “எல படுக்காலி பய மாருலாம் சோலிக்கு போகாம காலையிலேயே எங்க கெளிம்பிட்டீக…….?”

ஆங்...... உங்க பேரனுக்கு பொண்ணு பாக்க போறாம் வாரீகளா….?”-ரீகன்.

அது எவம்ல எம் பேரனுக்கு பொண்ணு பாக்குறவரு…… நாங்க தான் இங்க லட்டு மாறி பொண்ணு வச்சிருக்கோம்ல…… ஏழு கழத வயசாயி இன்னும் மொட்டைய திரியிறியரே உமக்கு போய் பொண்ணு பாரும்…..” பதிலுக்கு அவளும் ரீகனை வாரினாள்.

எல இது தேவையா ஒனக்கு….. சும்மா கெடக்க மாட்டியோ….. ஆச்சி நீங்க மெல்ல உள்ள போங்க நாங்க இங்க பக்கதில போயிட்டு உடனே வந்திர்றோம்.”

எய்யா டேவிட் மவன் சாம் தான நீ……? அப்பா எப்படி இருக்காப்ல? பக்கத்துல தான்  வீடுனாலும் எட்டிக் கூட பாக்க முடியல….. தங்கச்சி நல்லா இருக்காளா? அம்மாவ கேட்டதா சொல்லுயா….”

சரி ஆச்சி….”

அவர்கள் ஆச்சியோடு வம்பளந்து கொண்டிருக்கையிலேயே பிரவீண் வேகமாய் கிளம்பி என்ன போவோமா?” என்றபடி வந்தான். “சரி ஆச்சி இப்ப வந்திர்றேன்….” என்றபடி அவன் நண்பர்களோடு கிளம்பி போனான்.

அவர்கள் வழக்கமாய் அற்றை நாளில் கூடும் இடமான மோகன் அண்ணன் கடைக்கு சென்றார்கள். அது 16-ஆம் காம்பவுண்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி கீழச்சண்முகபுரத்துக்கு போகும் வழியில் ஒரு சின்ன சந்தில் மறைவாய் இருக்கும் பெட்டிக்கடை.

“எவ்வளவு நாளாச்சு இங்கெல்லாம் வந்து.... மோகன்ணே எப்படி இருக்கீங்க? என்னய ஞாபகமிருக்கா?

ஜோசப்பண்ணே மருமவன் பிரவீண்தானே? எப்ப தம்பி வந்தீங்க?

நேத்துதாம்னே

விட்டா இவுரு பேசிகிட்டே இருப்பாரு மூணு கிங்ஸ் தாங்க மொதல்ல....”-ரீகன்.

“எல இவன் இன்னும் சிகிரெட் கூட அடிக்க பழகலியா?பிரவீண் சாமை சுட்டிக்காட்டி கேட்டான்.

“இன்னும் அம்மாஞ்சியாவே திரியிறாம்ல..... அவன் உதட்டப் பாரு நல்ல பிகரு உதடு கணக்கா செக்க செவேல்னு இருக்கு”-ராஜா.

“இப்பெல்லாம் எவ உதடு செவப்பா இருக்கு எல்லா பயவுள்ளையலும் கண்ட சாயத்தியும் தடவியில்ல உதட்ட செகப்பா வச்சிருக்காள்வ”-சாம்.

“பேசுறதெல்லாம் வக்கனையா பேசு..... கம்ப சுத்த சொன்னா மட்டும் கண்ணக் குத்தி வுட்டுரு”- ரீகன்.

மூவரும் சிரித்தபடியே சிகிரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்கள்.

“எல வெளிநாட்டுகெல்லாம் போயிட்டு வந்திருக்க சரக்கு என்ன வாங்கிட்டு வந்த?”-ரீகன்.

“நானே எங்க ஆச்சி நச்சரிப்பு தாங்க முடியாம வந்தேன்..... வர்ற அவசரத்துல வீட்டுக்கே ஒண்ணும் வாங்காம வந்திட்டேன் இதுல சரக்கு வேறையா?

எல பார்டிலாம் கெடையாதா?- கவலையாக ராஜா.

பார்டி குடுக்கலன்னா இவன விட்டுருவோமா?-சாம்

மயிரு.... நீ அடிப்பனா சொல்லுல இப்பவே போவோம்....

தண்ணி அடிச்சாத்தான் பார்ட்டியா? சரக்கு அடிக்கிறவனுக்கு சரக்கு பார்டி..... எனக்கு சைட் டிஷ் பார்ட்டி

இதெல்லாம் ஒரு பொழப்பால.....?எனக் கிண்டலாய் சிரித்தான் பிரவீண்.

“கப்பல்ல வெள்ளக்காரி ஜாரி எதுவும் சிக்கிச்சால.....?”-ரீகன்.

“அவனவன் நொந்து போய் வந்திருக்காம்.... இதுல ஜாரி ஒரு கேடா?”

“சக்கரப் பானக்குள்ள கைய வுட்டிட்டு விரல நக்கலன்னா எப்படி மாப்ள?” என தத்துவம் பொழிந்தான் ராஜா.

“வா வான்னு அவுத்து போட்டிட்டு நிப்பாள்வன்னு நெனச்சியோ?”

“அதான் போர்டுக்குள்ளயே கெடக்குமாம்ல? நம்ம கட்டயன் இளங்கோ....தைலி ஒழுங்கா புடிச்சு மொளத் தெரியாத பய அவம்லாம் ஒருத்திய அவன் கேபின்லயே பொண்டாட்டி மாறி வச்சிருந்தாம்னு சொன்னான்..... நீ என்னடான்னா....”-என விடாப்பிடியாய் நின்றான் ராஜா.

“எல ஒரு சில போர்ட்ல எதாவது எங்ககிட்ட வெளிநாட்டு சரக்கு, சாமான் கெடக்கும்னு வருவாள்வ....பாவம்ல அதுகளுக்கு எதையாவது குடுத்தா அவளுவ பாட்டுக்கு வாங்கிட்டு போயிறுவாள்வ.... நம்ம இந்த சோலிக்கா போனோம்?”

“அதான் எதையாவது குடுத்தியான்னு கேக்கம்”-ராஜா.

“பொழுதன்னைக்கும் இதே நெனப்போட திரியிறதுக்கு பதிலா கல்யாணம் கில்யாணம் பண்ணித் தொலையலாம்ல…… எட்டாம் கிளாஸ்ல செக்ஸ்புக் படிக்க ஆரம்பிச்ச.... இன்னும் செக்ஸ் கத கேக்குற ஆச அடங்காம அலையுற பாரு…… இந்த ஆர்வமும், அரிப்பும் தாம்ல உன்னய வாழ்கையில எங்கயோ கொண்டு போகப் போவுது…..பாரேன்என செல்ல சாபம் விட்டான் பிரவீண்.

பதிலுக்கு ராஜாவும் ஆமோல நான் எட்டாங் கிளாஸ் படிக்கும் போது செக்ஸ் புக்கு படிச்சேன் அப்ப நீங்க எல்லா(ம்) விஞ்ஞான ஆராய்சியா பண்ணிட்டு கெடந்தீக? ஸ்கூலுக்கு போகாம காலங்காத்தால பதினோரு மணிக்கு கார்னேஷன் தியேட்டரில செக்ஸு படத்துக்கு நாக்க தொங்கப் போட்டுகிட்டு போனவன் தானல நீயி?”

ச்சே அந்த நாள்லாம் மறக்க முடியுமால….? வீட்டுக்கு பக்கதுலயே தியேட்டரு…. எந்நேரமும் அங்கிட்டும் இங்கிட்டும் நம்ம காம்பவுண்ட் ஆளுக போயி வர்ற எடம்…….. காலங்காத்தால ஸ்கூலுக்கு போவாம இங்க மோகன்ண கடையில சட்டைய மாத்திக்கிட்டு பட்டப்பகல்ல செக்ஸு படத்துக்கு போனதெல்லாம் ஒரு குருட்டு தைரியந்தான் என்னல?” என்றபடி பிரவீண் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனான்.

ஒருதடவ ஞாபகமிருக்கா ஒனக்கு….? நம்ம காம்பவுண்ட் ஸ்டெல்லாக்கா தம்பி….. அவந்தாம்ல சேவியர் அவன் நம்மள கார்னேஷன்ல செக்ஸு படம் பாக்க போனப்ப அவனும் அங்க வந்து….. அவன் நம்மள கண்டு ஒளிய நாம அவன கண்டு ஓடன்னு பாதி படத்துல எந்திச்சு வந்தமே?”

தயோலி அவம்லா(ன்) இன்னும் உயிரோட அலையிறானா….. மொட்டக் கூதியான்…. சின்ன வயசுல ஸ்டெல்லாக்கா மவன் இன்பங்கூட விளாட வீட்டுக்கு போனா….. இந்த தயோலி மறிச்சு நிப்பாட்டி அத இத பேசிக்கிட்டே அவன் சுன்னிய கொண்டு நம்ம பின்னாடி வச்சு தடவுவாம் ஞாபகம் இருக்கால….ராஜா? அப்ப என்ன பண்ணன்னு வெவரம் தெரியாம வீட்லயும் சொல்லாம…… விட்டிட்டோம்……. இப்ப நெனச்சா கேந்தியா இருக்கு…..”

எல என்ன பிரவீண் சொல்ற….. இன்பன் மாமன் ஹோமோவால?”-சாம்.

மாப்ள ஹோமாவா இருக்குறது ஒண்ணும் தப்பில்ல….. ஆம்பளையும் ஆம்பளையும் சுயவிருப்பத்தோட பண்ணுறதுல அது. அதுவும் நம்மள மாறி இயற்கையானது தான். ஆனா இது வெறி பிடிச்ச மிருகம்….. வீட்டுக்கு வெளயாட வர்ற சின்ன புள்ளயலை இல்ல அப்படி பண்ணும் நாயி….. சின்னச் சின்ன புள்ளைக்கிட்டயே வெறிய காமிச்ச நாயி சொந்த வீட்ட எச்சி பண்ணாமையா இருக்கும்…..? தாயோலிக்கு காலகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சிருந்தா கூட ஒழுங்கா இருந்து தொலச்சிருப்பான்…..”

உங்க ரெண்டு பேரையுமே அவன் குண்டி அடிச்சிருக்கான் சொல்லு….”-ரீகன்.

செருப்பால அடி சின்னக் கூதியானே….. அவன இப்ப வரச் சொல்லுல எவன் எவனுக்கு குண்டி அடிக்காம்னு பாப்போம்….. இவன் ஒருத்தன் என்னத்தையாவது ஒளரிக் கொட்டிகிட்டு…..பெரிய ப்ளாஷ் பேக் சொல்றானாம்…..மயிறுஎன ரீகனையும், பிரவீணையும் சேர்த்தே கடிந்து கொண்டான் ராஜா.

ஒருவரையொருவர் வாரிக் கொண்டும், கிண்டலடித்தபடியும் நேரம் போவதே தெரியாமல் மோகன்ணண் கடையின் முன்பாக நின்று பேசிக் கொண்டே இருந்தார்கள். வெகுகாலம் கழித்து தன் நண்பர்களோடு தனது பழைய காம்பவுண்ட் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டு இருந்தவன் மதியம் இரண்டரைக்கும் மேலாகத்தான் வீடு திரும்பினான்.

இப்ப வந்திர்றேன் ஆச்சிண்ட்டு போனவன் எப்ப வந்து நிக்க பாரு….”

பயலுவ கூட பேசிட்டு இருந்தனா நேரம் போனதே தெரியல…..”

முதல்ல சாப்புடுய்யா……” என்றபடி சாப்பாட்டை அவனுக்கு எடுத்து வைத்தாள்.

ஆச்சி நீங்க சாப்டீங்களா…..?” அவள் மௌனமாய் இருக்கவும்என்னஞ…. நீங்க வயசான காலத்துல இப்படி எனக்காக காத்து கெடக்கனுமா….? சாப்பிடுங்க முதல்ல…..”

நான் அப்புறம் சாப்புடுறேன்…. நீ முதல்ல சாப்புடு…..”

இப்ப நீங்க பிளேட்ட எடுத்திட்டு வாரீகளா…..”என சொல்லியபடி அவனே எழுந்து சென்று அவளுக்கும் பிளேட் எடுத்து வந்தான். அவள் தன் தட்டில் சோற்றைப் போட்டு அவனுக்கு ஊட்டுவதற்கு சோற்றை உருண்டையாக்கி அவனது வாயருகே கொண்டு சென்றாள்.

அவன்ஆச்சி.... நீங்க சாப்பிடுங்கன்னு பிளேட் எடுத்து குடுத்தா.... எனக்கு ஊட்றீகளே.....?

சாப்பிடுய்யா.... எங்கையால ஊட்டி எத்தன நாளாச்சு உனக்கு?என்றபடி அவனுக்கு ஊட்டத்துவங்கினாள்.

அவன் நீங்க சாப்புடுங்க ஆச்சி....என வாயில் சோற்றை மென்றவாறே சொன்னாலும் அவள் ஊட்டுவதை அவன் விரும்பவே செய்தான். அவள் அவனுக்கு கவளங்களை உருட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அவளது கண்கள் பனித்து சுருக்கங்கள் விழுந்து போன அவளது கன்னங்கள் வழியே இறங்க துவங்கியது. இதைப் பார்த்ததும் பிரவீணின் மனமும் கலங்கி கண்கள் கொஞ்சம் இருண்டாலும் அவன் தன் மன அரண்களை கொண்டு கனியும் நீரை தேக்கியபடி “ஆச்சி...எங்ஞ.... நீங்க சாப்பிடுங்க முதல்ல.... எனக்கு ஊட்டுனது போதும்....”.

தன் கண்ணீர் தன் பேரனை கலங்கச் செய்வதை புரிந்து கொண்டவளாய்..... எய்யா உங்கிட்ட காசு இருந்தா…. மாதா கோயில் திருவிழாக்கு உம் மாமனுக்கு, உங்க அத்தகாரிக்கு அப்புறம் அந்த ஸ்வீட்டி குட்டிக்கு எல்லாருக்கும் எதாவது துணிமணி எடுத்து குடுய்யா…..” என சம்பந்தமில்லாமல் ஏதோ பேசி அந்த கணத்தின் இறுக்கத்தை தளர்த்தினாள்.

அவனும் தனக்கு ஏன் இது தோன்றவேயில்லை?என நினைத்துக்கொண்டவனாய் ஆமா ஆச்சி அவங்களுக்கு வாங்கித் தாரது இருக்கட்டும் உங்களுக்கு எதுவும் வேண்டாமா…?”

நீரு வாங்கித் தந்தா கெட்டிக்கிர்றேன்….. வேண்டாம்னு யார் சொன்னா?” அவன் சிரித்துக் கொண்டான். “இன்னக்கி சாயிங்காலமே போலாம் சரியா? மாமாகிட்டேயும் சொல்லிருங்கஎன்றபடி கைகழுவ சென்றான். ஜொஸியம்மேக்கு பூரிப்பு கொள்ளவில்லை... வேகமாய் சாப்பிட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு தன் மகன் வீட்டிற்கு விரைந்தாள். பிரவீண் ஏதேதோ எண்ணங்களோடு அப்படியே கட்டிலில் விழுந்தான்.


.....தொடரும்.

கருத்துகள் இல்லை: