அன்பானவர்களுக்கு
தியாகமே வாழ்வாகி விடுதலைப் போரிலும், இடதுசாரிகள் இயக்கத்திலும் பெரும் பங்களிப்பு செய்த வீராங்கனை, எளிய தாயுள்ளம் கொண்ட உன்னதத் தோழர் மீனா கிருஷ்ணசாமி தமது 90 ம் வயதில் இன்று காலை பிரியா விடை பெற்றார்.....
மகத்தான அந்தத் தோழர் நினைவுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன்..
தேசியத்தின் விளைநிலமான மதுரையில் 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம்
15ம்
தேதி
பிறந்தேன். அக்கால
கட்டத்தில் மதுரையின் தேச
பக்தி
வெள்ளம் யாரையும் தனக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும் சக்தி
வாய்ந்ததாக இருந்தது. ருக்மணி லெட்சுமிபதியும், சரோஜினி நாயுடுவும் தங்கள்
தோளில்
கதரைப்
போட்டுக் கொண்டு, கெஜக்கோலுடன் வீடு
வீடாகச் சென்று
கதர்த்
துணியை
விற்பனை செய்து
வந்த
காலமது.
எனது தந்தையார் கோபால்ராவ் எனது சிறுவயதின்போதே காலமாகிவிட்டதால், தாயார் லக்ஷ்மிபாயே குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.
எனது
தாயார்
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்திலும், சுதேசி
துணி
மறியலிலும் (அந்நிய
துணி
பகிஷ்காரம்) தீவிரமாக ஈடுபட்டவர். ஒரு
முறை
எனது
தாயார்
சுதேசி
துணி
மறியலில் ஈடுபட்டபோது அவரையும் அவரது
தோழி
சொர்ணம்மாளையும் தீச்சட்டி கோவிந்தன் என்ற
போலீஸ்
அதிகாரி கைது
செய்து
வேனில்
ஏற்றினான. வேன்
ஊருக்கு வெளியில் வரும்வரை அவர்கள் இருவரையும் அடித்து உதைத்தான் கோவிந்தன். பிறகு
அவர்களைப் பிறந்த
மேனியாக்கிக் காட்டில் ஒரு
பள்ளத்தில் தள்ளி
விட்டுச் சென்று
விட்டான். இருவரின் அலறலையும் கேட்டு
ஓடிவந்த கிராமவாசிகள், அவர்களின் மானம்
மறைக்கத் துணி
கொடுத்து அழைத்துச் சென்றனர்.
இந்த
நிகழ்ச்சிக்குப் பிறகும் கூட
எனது
தாயார்
தேசியப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இத்தகைய தேசபக்தி மிகுந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததால், எனக்கும் இயற்கையாகவே தேசிய
உணாச்சி அதிகமிருந்தத
வாழ்க்கையில் ஜான்சிராணி லக்ஷ்மிபாய், சிட்டகாங் வீராங்கனை கல்பனாததைப் போன்று நானும் சாதனைகள் செய்யவேண்டும்; வெள்ளையர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று சபதமெடுத்தேன்.
தேசிய
உணர்ச்சி அதிகமிருந்ததால் பன்னிரெண்டு வயதாக
இருக்கையில் சுதேசி
துணி
மறியலில் ஈடுபட்டு கைது
செய்யப்பட்டேன். நீதிபதியிடம் 'பதினாறு வயது'
என்று
பொய்
சொல்லிச் சிறை
சென்றேன். பத்து
நாட்கள் மதுரை
சிறையில் வாசம்
செய்த
பிறகு
கேரளம்
கண்ணனூர் சிறைக்கு மாற்றினார்கள்.
நிலாவே வா!
கண்ணனூர் சிறையில் வெளியுலகத்தையோ, வானத்தையோ பார்க்க முடியாது. ஒரு
நாள்
வார்டன் அம்மாவிடம், "நிலாவைப் பார்க்க ஆசையாக
இருக்கிறது" என்று சொன்னேன். மனிதாபிமானமிக்க அந்த
வார்டன் எல்லோரும் உறங்கியபிறகு கதவைத்
திறந்து எனக்கு
நிலாவைக் காண்பித்து எனது
ஆசையை
நிறைவேற்றினார்கள்.
மகாத்மா காந்தி
மதுரைக்கு வந்தபோது சுதேசி
இயக்கத்திற்காக என்
காதில்
போட்டிருந்த சிறு
கம்மலைக் கழற்றி
அவரிடம் தந்தேன். அவர்,
"இனிமேல் நீ
நகையே
போடக்
கூடாது"
என்று
என்னிடம் சொன்னார். அதன்
பிறகு
நானும்
நகைகள்
அணிவதையே நிறுத்திவிட்டேன்.
அப்போது காந்தி
காதர்,
மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, இந்தி
படித்தல் ஆகிய
தன்
நான்கு
அம்சத்
திட்டத்தை நாடெங்கும் பிரயாணம் செய்து
பிரச்சாரம் செய்து
வந்தார். அந்த
திட்டத்தின்படி, இந்தி
படிக்க
தலைவர்கள் என்னைத் தேர்வு
செய்தார்கள்.
ஞானயாத்திரை
பி.ராமமூர்த்தி வழிகாட்டுதல்படி
'ஞானயாத்திரை' என்ற
பெயரில் நானும்
சில
இளைஞர்களும் பிரபல
இந்தி
கவிஞரான மகாதேவி வர்மா
நடத்தி
வந்த
'மகிலா
வித்யா
பீடத்தில்' சேர்ந்து இந்தி
படிக்க
அலகாபாத் சென்றோம்.
மகாதேவி வர்மா,
பதினான்கு வயதான
நான்
இந்தி
படித்தால் மட்டும் போதாது
என்று
கூறி,
முறையான கல்வியும் பயில்வதற்காக ஆறாம்
வகுப்பில் சேர்த்தார். ஏழு
ஆண்டுகள் அலகாபாத்தில் கல்வி
பயின்று, பனாரஸ்
மெட்ரிக்கில் தேறினேன். இந்தியில் உயர்
பட்டமும் பெற்றேன்.
வாழ்க்கைப் பயணத்தில் எனது
துணைவராக இணைந்த
திரு
எஸ்
கிருஷ்ணசாமி அப்போது காசியில் உள்ள
பனாரஸ்
சர்வகலாசாலையில் தேசிய
கல்வி
பயின்று வந்தார். என்னை
சந்தித்துப் பேச
அவர்
சில
சமயம்
அலகாபாத்திற்கு வருவதுண்டு.
காந்தி ஆசிரமம்
1939ம் ஆண்டு
மதுரைக்குத் திரும்பினேன். அப்போது வார்தாவிலுள்ள காந்தி
ஆசிரமத்திற்குச் சென்று
பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறக்குறைய மூன்று
ஆண்டுகள் காந்தி
ஆசிரமத்தில் சேவை
புரிந்தேன். பல
தேசிய
தலைவர்களை அருகிலேயே பார்க்கவும், அவர்கள் உரையைக் கேட்கவும் அறிய
சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
ஒருமுறை நேருஜி
சீனப்
பயணம்
செய்துவிட்டு வருகையில் ஒரு
பேனாவிற்குள் அடங்கும் பட்டுத் துணியை
வாங்கிவந்து எங்களிடம் காண்பித்து எங்களை
அசர
வைத்தார்.
செய் அல்லது செத்துமடி!
1942ம் ஆண்டு
ஆகஸ்டு
கிளர்ச்சியில், காந்தி
கைதாகும்போது அவருக்கு வெற்றித் திலகமிட்டு வழியனுப்பினோம்.
'செய் அல்லது
செத்துமடி' (Do or Die) என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு வார்தாவின் வீதிகளில் வீடு
வீடாகச் சென்று
மக்களுக்குக் கிளர்ச்சியூட்டினோம்.
1942ல் 'வெள்ளையனே வெளியேறு ' போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு ஜபல்பூர் சிறைக்குக் கொண்டு செல்லப் பட்டேன். பதின்மூன்று மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, 1943ல் விடுதலையாகி மீண்டும் மதுரைக்கு வந்தேன்.
காங்கிரசிலிருந்து கம்யூனிசத்திற்கு
அச்சமயம் மக்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். ராட்டையும், கதரும், தீண்டாமையும் மட்டும் எப்படி சுதந்திரத்தை வாங்கித் தரும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பினர். அக்கேள்வி என்னுள்ளும் எழுந்தது. சிறையிலிருக்கையில் பொதுவுடைமை நூல்களை நிறைய படித்ததால் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையின்பால் மெல்ல மெல்ல பற்று உண்டாயிற்று.
தோழர்
எஸ்
கிருஷ்ணசாமி அப்போது மதுரையில் சோஷியலிஸ்ட் கட்சியின் கிளையினை உருவாக்கி அதன்
செயலாளராகப் பணியாற்றி வந்தார். காலத்தின் கட்டாயத்தால் சோஷியலிஸ்ட் கட்சியே மெல்ல
மெல்ல
'கம்யூனிஸ்ட்' கட்சியாக உருவானது. நானும்
கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, சுரண்டல் இல்லாத
சமுதாயம் உருவாக்க உறுதி
கொண்டேன்.
பெப்பர்மின்ட் கல்யாணம் !
1944ல் மதுரையில் வைத்து
எனக்கு
திருமணம் நடந்தது. கல்யாண
நாளன்று காலையில் மறியல்,
ஆர்ப்பாட்டம், மாலையில் கல்யாணம் என்று
முடிவு
செய்திருந்தோம். அன்று
காலை
மறியலில் ஈடுபட்டதற்காக வேண்டுமென்றே கைது
செய்யப்பட்டு பிறகு
விடுதலை செய்யப்பட்டேன்.
M.R.S. மணி என்ற தோழர்
ஒரு
பெரிய
பொட்டலம் நிறைய
பெப்பர்மின்ட் வாங்கி
வந்து
கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுத்து விழாவை
நிறைவு
செய்தார். எங்கள்
கல்யாணம் எளிமையான கல்யாணம்.
அன்றிரவு அம்பாள் ஓட்டலில், எனக்கும் எனது
கணவருக்கும் தலைவர்
பி
ராமமூர்த்தி ஒரு
தோசையும், காப்பியும் வாங்கித் தந்து
கல்யாண
விருந்து வைத்தார்.
பஞ்சும் பசியும்
1944 , 45 ல் கே.பி
ஜானகி
அம்மாளுடன் சேர்ந்து ஏழை
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அரிசி,
பருப்பு, விறகு,
மண்ணெண்ணெய்க்காகப் போராட்டங்கள் நடத்தினேன்.
குறிப்பாக பெண்களின் பசியைப் போக்க,
மதுரை
ஹார்வி
மில்லில் பனி
புரியும் பெண்
தொழிலாளர்களை எல்லாம் ஒன்று
திரட்டி, ஒரு
குறிப்பிட்ட தினத்தன்று ஊர்வலத்திற்கு வர
ஏற்பாடு செய்தோம்.
இந்த
இயக்கங்கள் தான்
கம்யூனிஸ்டுகள் தேச
விரோதியல்ல, மக்களுக்காக உண்மையாகப் பாடுபடக் கூடியவர்கள், கண்ணியமானவர்கள் என்ற
எண்ணப்
போக்கை
மக்களிடம் தோற்றுவித்தது.
1945ல் எனது
கணவர்
எஸ்
கிருஷ்ணசாமி பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்
செயலாளராகப் பணியாற்றி வருகையில் ஹார்வி
மில்லில் ஒரு
மாபெரும் வேலை
நிறுத்தம் ஏற்பட்டது. அதில்
கலந்து
கொள்கையில் எனது
மகன்
மோகனுக்கு ஒரு
வயது.
மேலும்
என்
வயிற்றில் மூன்று
மாதக்
கரு.
அந்த
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் எனக்கு
கருச்
சிதைவு
ஏற்பட்டது. ஹார்வி
மில்
நிர்வாகத்தின் தாக்குதலைத் தடுத்தபோது, ஒருவர்
கொல்லப்பட்டார். இந்த
வழக்குதான் பிற்காலத்தில் மதுரை
கம்யூனிஸ்ட் சதி
வழக்கு
என்று
அறியப்பட்டது. இந்த
வழக்கிற்காக கட்சியின் முக்கிய தலைவர்களையும், தொண்டர்களையும் தேடித்
தேடி
போலீஸ்
கைது
செய்து
சிறையில் அடைத்தது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் ஆறேழு
மாதங்களாகச் சிறையிலிருந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி
பெண்களால் தான்
நடத்தப் பட்டது.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் 1947 ஆகஸ்ட்
மாதம்
விடுதலையாகி வரும்
வரை,
ஆறேழு
மாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைக் காப்பாற்றி அதன்
தலைவர்களிடம் திருப்பிக் கொடுத்த பெருமை
பெண்களையே சாரும்.
செங்குருதிப் புனல்
1948-50 காலகட்டத்தில்
இந்தியாவெங்கும் எதேச்சதிகாரம் கோலோச்சியது. தமிழகத்தின் சிறைகளில் கம்யூனிஸ்டுகள் தங்கள்
இன்னுயிரைத் தியாகம் செய்து
இரத்தம் சிந்திய காலமது.
குறிப்பாக கடலூர்
சிறையில் கம்யூனிஸ்டுகளின் செங்குருதி புனலாக
ஓடியது.
கட்சியின் அலுவலகம் மூடி
சீல்
வைக்கப்பட்டது.
வறுமையும் சிவப்பும்
1950ல் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே
வந்து
பார்த்தால், கட்சியிடமே பணமில்லை; எங்களிடமும் பணமில்லை; வயிறு
காய்ந்தது; வறுமை
துரத்தியது. குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்ற
கவலை
அதிகமானது.
தொகுப்பு : எஸ் வி வேணுகோபாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக