செவ்வாய், 1 மே, 2012

16-ஆம் காம்பவுண்ட்.....12.

2010 ஜூலை 30….

அன்று ஸ்வீட்டி தன் கல்லூரிக்கு சென்றிருந்தாள்….. அங்கு ரொமிளாவிடம் இரண்டு நாட்களும் தனக்கு நடந்த எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு ஏதுமின்றி சொல்லிக்கொண்டிருந்தாள். ரொமிளாவும் ஸ்வீட்டியை சில விஷயங்களுக்கு கடிந்து கொண்டாலும்….. அவனுடனான நெருக்கத்தைப் பற்றி ஸ்வீட்டி சொன்ன போது ரொமிளாவுக்குள் கொஞ்சம் பொறாமை எட்டிப் பார்க்கவே செய்தது. ஆனால் அந்த எண்ணமே தன் நட்புக்கு செய்யும் துரோகம் என எண்ணியவளாய் உடனே அதை மாற்றிக் கொண்டு “உங்க மச்சான் தான்னாலும் கொஞ்சம் பாத்தே நடந்துக்கோயே….. எதுவும் அவசரப் பட்டுறாத…..” என எச்சரிக்கையும் செய்தாள்.

ரொமிளா அப்படி பேசியது ஸ்வீட்டிக்கு பிடிக்கவில்லை. தான் எல்லாவற்றையும் அவளிடம் அவசரப்பட்டு ஒப்புவித்து விட்டோமோ எனவும் அவளுக்கு எண்ணத் தோன்றியது. ஆனாலும் ஸ்வீட்டி அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏதேதோ சிந்தனை வயப்பட்டவளாகவே அன்று முழுக்க கல்லூரியில் இருந்தாள். வீட்டிற்கு போகவேண்டும் என்பதற்காக மதியம் மணி 2.00 எப்போது ஆகும்? என ஒவ்வொரு அரைமணிக்கும் ஒருமுறை நேரத்தை பார்த்த வண்ணமே வீற்றிருந்தாள். அவள் எண்ணமெல்லாம் பிரவீணைப் பற்றியதாகவே இருந்தது.

மதியம் மணி 2.00…..

வழக்கம் போல் தன்னை அழைக்க தன் தந்தை ஜோசப்தான் வருவார் என சென்றவளுக்கு அங்கே ஆச்சர்யமாய் பிரவீண் அவளுக்காக காத்திருந்தது சொல்லொண்ணா இன்பத்தை அளித்தது. தனது தோழி ரொமிளாவுடன் வெளியே வந்தவள்….. ரொமிளாவுக்கு பிரவீணை அறிமுகம் செய்து வைத்தாள். பிரவீணும் சம்பிரதாயமாக சிரித்து வைத்தான். ஓரிரு நிமிடங்கள் நின்று பேசிய ரொமிளா கிளம்பியவுடன் ஸ்வீட்டி உற்சாகமாக பிரவீணோடு வண்டியில் ஏறியபடி….”என்ன மச்சான் ஆச்சர்யமா இருக்கு இன்னக்கு நீங்களே என்னைய கூப்பிட வந்திட்டீங்க?”

“மாமாவும் அத்தையும் புன்னக்காயலுக்கு ஒரு அடக்க வீட்டுக்கு போயிருக்காங்க…. அதான் நான் கூப்புட வந்தேன்…”

“அடக்க வீடா யாரு?”

“யாரோ உங்க அம்மாவோட பெரியம்மா மகளாம் அங்க கெட்டி குடுத்திருந்தாங்களாமே அவுகதான் இறந்து போனதாம்….”

“யாரு லூர்து பெரியம்மாவா?”

“ஆமோ அப்படித்தான் எதுவோ சொன்ன மாறி இருந்திச்சு….. ஏன் உனக்கு ரொம்ப தெரியுமோ?”

“இது என்ன கேள்வி எங்க பெரியம்மாவ எனக்கு தெரியாதா?”

“அவுகன்னா உனக்கு ரொம்ப பிரியமோ?”

“ஏன் உங்ககிட்ட மட்டுந்தான் பிரியமா இருக்கனுமா என்ன?”

அவன் சிரித்துக் கொண்டான். இருவரும் ஏதேதோ பேசியபடி வீடு வந்து சேர்ந்தனர். ஜொஸியம்மே அவர்களுக்காக வாசலிலே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் வீட்டுக்குள் வந்ததும்….

“ஏ!!!! புள்ளையளா…. ரெண்டு பேரும் முஞ்சிய கழுவிட்டு சாப்பிடுங்க ஆச்சி செத்த இங்க கனியாச்சி வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்.”

“என்ன ஆச்சி இந்நேரத்துல அங்க போறீங்க? சாப்புட்டீகளா?”

“சாப்புட்டம்யா….. அங்க சூட்டாண்ணே (ஜூடு கனியாச்சியின் கடைசி மகன்) பொண்டாட்டிக்கு ஏதோ வயிறு வலி கண்ட மாறியிருக்காம்….. நான் கொஞ்சம் கூடமாட இருந்தா அவளுக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்…. ஒரு எட்டுல போயிட்டு வந்திர்றேன்….. எம்மா ஸ்வீட்டி மச்சானுக்கு சாப்பாட்ட போட்டு கவனிச்சுக்கம்மா….” என்றபடி அவள் கனியாச்சி வீட்டை நோக்கி விரைந்தாள்.

”மச்சான் நீங்க முதல்ல சாப்புட உக்காருங்க”

“ஏன் நீ எங்க போற?”

“கசகசன்னு இருக்கு மச்சான் நான் குளிச்சிட்டு சாப்புடுறேன்”

“சரி…. நீ குளிச்சிட்டு வா…. பெறவு சாப்பிடுவோம்”

“சொன்னா கேளுங்க மச்சான்”

“நான் சொல்றத நீ முதல்ல கேளு போயி குளிச்சிட்டு வாடி….”

“இந்த அதிகாரமெல்லாம் எங்கிட்ட வேண்டாம்….”

“சரி….டி போ….”

அவள் தன் வீட்டிற்கு குளிக்க சென்றாள். அரைமணி நேரத்துக்கும் மேலாகியும் அவள் வரவில்லை என்பதால் காத்துக் கொண்டிருக்க பொறுமையின்றி அவன் அவள் வீட்டுக் கதவை தட்டினான். அவள் உள்ளிருந்து பேசியது அவனுக்கு கேட்கவில்லை. அவன் தொடர்ந்து தட்டிய வண்ணமிருந்தான். உள்ளிருந்தபடியே கத்திக் கொண்டிருந்தவள் அவன் தொடர்ந்து தட்டுவதை நிறுத்தாததாள்…… டாப்ஸை மட்டும் மாட்டிக் கொண்டு வேகமாக வந்து கொண்டியை இழுத்து கதவை திறந்து விட்டபடி தன் அறைக்குள்….. அவன் வருவதற்குள் சென்றுவிடலாம் என எத்தனித்தவளின் கால் கட்டைவிரல் கதவில் மோத….. வலியால் துடித்துப் போனாள். அவன் உள்ளே சென்றதும் அவள் வலியால் துடிப்பதை கண்டவுடன்….. பதறிப்போய் அவளருகே சென்றபடி “என்ன ஆச்சுயே….. என்ன ஆச்சு?”

“கால் பெருவெரல…. கதவுல மோதிட்டேன் மச்சான்…..”

“எங்க காட்டுடி?”

அவளும் தன்னிலை மறந்தவளாய் வலியில் தன் கால்விரலை காட்ட காலை அவனை நோக்கி திருப்பிக் காட்டினாள். குனிந்து பார்த்தான்……

அங்கே மெழுகில் மொழுகிய செவ்வாழை தண்டாட்டம் அவளது கால்கள் பளபளத்துக் கொண்டிருந்தது. அத்தனை நெருக்கமாய் ஒரு பெண்ணை….. அதுவும் அவன் காதலியை அப்படி ஒரு அரை நிர்வாணக் கோலத்தில் கண்டவுடன் தன்னிலை மறந்தவனாய்…… அவள் விரல் நீவ நீண்ட கைகள் அவள் தொடையில் படரத் துவங்கியது.

அவன் கைகள் அவள் கால்களை தீண்டியவுடன்…… வலியின் சுவடுகள் மறைந்து காமத்தின் ரேகைகள் அவளுக்குள்ளும் எழுச்சி கொண்டது. பெண்களின் கண்களில் விழுந்தவர்களே மீண்டதில்லை என்னும் போது கால்களில் விழுந்தவன் நிலை?

விழுந்தவன் எழுந்தான்…… எழுந்தவன் அணைந்தான்…… அணைந்தவன் மீண்டும் விழுந்தான் அவளோடு…. எழுச்சியும் வீழ்ச்சியுமாய் அங்கே ஒரு உன்னத இயக்கம் தோன்றியது. இதழியல் மோதல்…. ஈருடல் சேர்க்கை….. ஓருடல் இயக்கத்தின் தொடர் முயற்சியால் கனலில் புனல் பாய்ந்தது. அவள் வெந்து தனிந்தாள்….. அவன் வீழ்ந்து அணைந்தான். இருவரும் களைத்து பிரிந்த கணத்தின் நீட்சியில் காமன் மீண்டும் ஆட்சிக்கு அங்கு வந்தான்……

அங்கே நொடிகள் புனர….. நிமிடம் பிறந்தது….. நிமிடங்கள் புனர நாழிகைகள் உருக்கொண்டது….. ஒருவழியாய் இருவரும் காமன் கைபிடியிலிருந்து விடுபட்டபோது முழுதாய் ஒன்னரை மணி நேரம் கடந்திருந்தது. நேரம் பாராமல் கூடியவர்கள் நேரம் பார்த்து விழித்துப் பிரிந்தார்கள்.

பிரவீணுக்கு சொல்லொண்ணா உணர்வுகளுக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தான். ’தான் அவசரப்பட்டு விட்டேனோ?’ என தோன்றிய மறுகணம் ’நாம் தானே அவளை கெட்டிக்கப் போவது? இதில் தவறென்ன?’ என மாற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டான். ‘என்னவிருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னால் இப்படி அவசரப் பட்டுடிருக்க கூடாதோ?’ என தோன்றிய போதே ‘ஓரிரு மாதங்களில்….. அவள் படிப்பை முடிக்கும் முன்பே கூட கல்யாணம் செய்து வைக்க சொன்னாள் மறுத்தா விடுவார்கள்?’ என எண்ணங்களால் மாற்றி மாற்றி தவித்துக் கொண்டிருந்தான்.

ஸ்வீட்டியோ எந்த கவலையுமின்றி உற்சாகமாய் இருந்தாள். அவளுக்குள் முந்தைய தினம் ஏதோ ஒரு மூலையில் காரணமின்றி அழுத்திக் கொண்டிருந்த பயம் கூட இப்போது போன இடம் தெரியாமல் மறைந்து விட்டிருந்தது. அவள் எந்த குழப்பமும் இன்றி மிகத்தெளிவாய் இருந்தாள்.

மாலை 4.30 மணி……

பிரவீண் தன் பாட்டி வீட்டில் சிந்தனை வயப்பட்டவனாய் அமர்ந்திருந்தான். அவனுக்குள் இன்னும் மனக்கடல் ஓய்ந்திருக்கவில்லை. ஸ்வீட்டி உற்சாகமாய் அங்கு வந்தவள் “என்ன மச்சான்….. ரொம்ப பீலிங்கா இருக்கீங்க?” என்றபடி அவன் காதருகே குனிந்து “யாராவது ரேப் பண்ணிட்டாங்களா?” என கிண்டலடித்தாள்.

“உன்னால எப்படியே இப்புடி இருக்க முடியுது?”

“என்ன எப்புடி இருக்க முடியுது?”

“இவ்வளவு சகஜமா எப்படியே?”

“மச்சான்….. எப்படினாலும் நமக்கு கல்யாணம் முடிஞ்சிட்ட பொறவு இதெல்லாம் நடக்குறது தான்….. அது இப்பவே நடந்திருச்சு அவ்வளவுதான்…..”

“நீ சாதாரணமா சொல்ற…… நாளைக்கே ஒன்ணுகெடக்க ஒண்ணு ஆயி….. நாந்தான…. மாமா அத்த முகத்துல முழிக்கனும்?”

“அதுக்காக வாடைகக்கா மொகம் வாங்க முடியும்?”

அவள் ஏதேதோ பேசி அவனை இயல்புக்கு திரும்ப செய்து கொண்டிருந்தாள். ஜொஸியம்மே வீடு வந்து சேர்ந்தாள். கிச்சனுக்குள் போனவள் எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்க…..

“ஏ!!! புள்ளையிளா…… என்ன எல்லாம் அப்படியே இருக்கு ரெண்டு பேரும் சாப்பிடளையா?”

“பசிக்கல ஆச்சி….. பேசிக்கிட்டே இருந்தோம் நேர போனது தெரியல” என்றான் பிரவீண்.

”என்ன நேரம் போனது தெரியலங்கிறீரு….? சாப்புடாம கொள்ளாம அப்படியென்ன மாய சொக்குபொடி போட்டா ஒம் மாமன் மவ?”

“ஆமோ….. அங்க போனீங்களே என்ன ஆச்சு?” என லாவகமாய் பேச்சை மாற்றினான். வழக்கம்போல சூட்டு வலிதான்….. இன்னும் ரெண்டு நா பாப்போம்னு டாக்டரம்மா சொல்லிட்டாக….”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரவீணை தேடி அவனது நண்பர்கள் ரீகனும், சாமும் வந்தார்கள். அவனுக்கும் அங்கிருந்து சற்று நேரம் அவர்களோடு சென்று வந்தால் நன்றாய் இருக்கும் என தோன்றியதால் வேகமாய் கிளம்பிச் சென்றான்.

வழக்கம் போல் மோகன் அண்ணன் கடை…..

“எல இப்படி வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்கியே நாங்க வந்தாதான் வெளிய வருவன்னு இருக்கியோ?”-ரீகன்

“அதெல்லா(ம்) இல்லல…… நான் வந்தே நாலு அஞ்சு நாள்தான் ஆவுது….. இங்க வீட்லையே நேரம் சரியா போவுது என்ன செய்ய சொல்ற?”

“அதுசரி!!! உனக்கென்னப்பா…… லட்டு மாறி மாமன் மவ இருக்கா….. நாளு பூரா அவள பாத்துக்கிட்டே கெடப்ப…… எங்களுக்கு அப்படியா?”-ரீகன்.

“உனக்கு வேற பேச்சே கெடையாதால?”

“சரி!!! விடு தேவையில்லாதத போட்டு பேசாம அவன் கிட்ட விஷயத்த சொல்லு?”-என ரீகனைப் பார்த்து சொன்னான் சாம்.

“என்னல விஷயம்?”-பிரவீண்.

“அவஞ் சொல்லுவான் இரு”-சாம்.

பிரவீண் ரீகனை ஏறிடவும்….. “மாப்ள நாளக்கி சனிக்கிழம பயலுவ எல்லாருக்கும் லீவு….. நீ வேற வந்திருக்க…… நாம காலையில ஒம்போது பத்து மணி போல ஆத்தூருக்கோ ஏரலுக்கோ போய்….. நல்லா குடிச்சிட்டு குளிச்சிட்டு மதியம் போல வந்திரலாம்ல….”

“திடீர்னு சொன்னா எப்புடில? வீட்ல ஆச்சிகிட்ட சொல்ல வேண்டாமா?”

“ஆம உங்க ஆச்சிகிட்ட அத்தகிட்ட எல்லார்டையும் சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு வால….. பேசுறான் பாரு கேனத்தனமா…. எதாவது சினிமா….. கினிமா போயிட்டு வாரேன்னு சொல்லிட்டு வருவியா அதவுட்டிட்டு….”

பிரவிணுக்கு ஏனோ அவர்களுடன் செல்ல விருப்பம் இருக்கவில்லை. ஆனாலும் அவர்களிடம் அப்போது முஞ்சியில் அடித்த மாதிரி தான் வரவிரும்பவில்லை என சொல்லவும் பிரியமில்லை. எவ்வளவோ பிடிகொடுக்காமல பேசி சமாளித்துப் பார்த்தான் அவர்கள் கேட்பதாய் தெரியவில்லை. சரி!!!! நாளை பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியவாறு அவர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

அவன் வீடு திரும்பிய போது அவனது மாமாவும், அத்தையும் வந்திருந்தனர். துக்க வீட்டு கதைகளையும், தன் அக்காளுக்கும் தனக்குமான நினைவுகளையும் சோபியா பிரவீணிடமும், ஜொஸியம்மேவிடமும் பகிர்ந்த வண்ணமிருந்தாள். அப்படியே பேச்சு வாக்கில் மறுநாள் மாலை குடும்பத்தோடு அனைவரும் மாதா கோவிலுக்கு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது ஸ்வீட்டி தனக்கு நாளை காலையில் கல்லூரியிலிருந்து திரியாத்திரை பூசை இருப்பதாக சொன்னாள். அவர்கள் கூடி உணவருந்த துவங்கிய போது ஸ்வீட்டி பிரவீணுக்கு மட்டும் கேட்கும் விதமாய் வந்து தன்னை நாளைக்கும் அவன் தான் திரியாத்திரை பூசைக்கு அழைத்து சென்று கூட்டிவர வேண்டும் என திடமாக கூறினாள்.

திருயாத்திரை….. என்பது தான் மருவி திரியாத்திரை என வழங்கப்பட்டு வருக்கிறது. அதற்கு புனித பயணம் என்று பொருள். பனிமயமாதா கோயிலின் திருவிழா காலங்களில் இப்படி ஒரு பழக்கமுண்டு….. தூத்துக்குடியில் உள்ள ஏனைய பங்குகளில் உள்ள சபைகளில் இருந்தும், கிறுத்தவ கல்வி நிறுவனங்களில் இருந்தும் திருவிழா நடக்கும் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு நாளின் பகல் பொழுதில் தமது பங்கிலிருந்தோ…… அல்லது கல்வி நிறுவனத்திலிருந்தோ திரியாத்திரையாக மக்கள் ஒன்று கூடி கிளம்பிச் சென்று பனிமய மாதாவிற்கு திருப்பலி நிறைவேற்றி வழிபட்டு வருவர்.

பிரவீணுக்கு அன்றைய இரவு அத்தனை நீளமானதாய் இருந்தது. அவனுக்கு தூக்கம் பிடிக்கவேயில்லை. தனது இத்தனை ஆண்டுகள் தவத்தை ஒருசில நொடிகளில் அவள் களவாடிச் சென்றதை எண்ணி தவித்துக் கொண்டிருந்தான். இன்னும் அவன் மேல் அவளது வாசனை படர்ந்து இருப்பதாகவே தோன்றியது. தலையனைகள் திடீரென்று அவளாய் மாறிவிடாதா? என எண்ணிக் கொண்டான். ஒருவித பரவசித்திலே மிதந்து கொண்டிருந்தான். அவனது ஆண்மை விரைத்து அவனை படுத்திக் கொண்டிருந்தது. வேறு வழியின்றி எழுந்து குளியலறைக்குள் சென்று மதியம் அவளுடன் சல்லாபித்ததை எண்ணி எண்ணி சுய இன்பத்தில் திளைந்தான். விந்துகள் வெளியேறியவுடன் நிதானத்துக்கு வந்தவனாய்….. கொஞ்சம் கொஞ்சமாய் அயற்சி பரவ தூங்கலாணான்.
..........தொடரும்.

கருத்துகள் இல்லை: