செவ்வாய், 7 ஏப்ரல், 2009

காலணி கலாட்டா!

திருவாளர் சிதம்பரத்தின் மேல் பத்திரிக்கையாளர் ஒருவர் செருப்பு தவறு 'சூ' வீசியது சரியா?தவறா?
இந்த சம்பவத்தை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம்.
முதலாவதாக நமது நாட்டின் உள்துறை அமைச்சரையே செருப்பிடம் மறுபடியும் தவறு 'சூ'விடம் இருந்து காப்பாற்ற முடியாத உள்துறை அமைச்சரகம் எப்படி தீவிரவாதிகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்றும்.
தன்னை காப்பாற்றுவது போல் (எது வந்து எப்போது விழும் என்று தெரியாத அளவிற்கு)இந்த தேசத்தை காத்து வரும் திருவாளர் சிதம்பரத்தை 'சூ' கொண்டு தாக்கியது எவ்வளவு 'பெரிய'குற்றம்?
இரண்டாவதாக என்னதான் உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்று அவரும், (நாட்டின் 'நலன்' ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல் பட்டு வரும்) 'காங்கிரஸ்' கட்சியும் நம்மை நல்ல விலைக்கு தவறு நிலைக்கு இட்டு செல்லும் இந்த நேரத்தில் செருப்பை (பாருடா!மறுபடி மறுபடி தப்புத்தப்பா எழுதிகிட்டு...)தவறு காலணிகளை கொண்டு இப்படி எறியலாமா?தேர்தலில் நாகரிகமாக நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம் அது ஜனநாயகம் (எங்கே!எங்கே!) ஆனால் காலணிகள் எறிவது எல்லாம் 'டூமச்'.
இந்த மாதிரி சந்தர்பங்கள் 'நம்மக்காகவே' நித்தம் நித்தம் ரத்தம் சிந்தி (ஆ!.......ஆ!....கவிதை கவிதை)பாடுபட்டும் ,உழைத்தும் வரும் நமது அரசியல் தலைவர்களுக்கு (நோ!நோ!அப்படியெல்லாம் 'manners' இல்லாம சிரிக்க கூடாது) இனிமேல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தும் முன்பு அனைவரும் 'காலணிகளை' வெளியில் கழட்டிவிட்டு தான் வரவேண்டும் என சட்டம் போடலாம் அப்படி கழட்டிவிட்டு வரும் செருப்பு காணாமல் போனால் சம்பந்த பட்ட அரசியல் தலைவரோ அல்லது அவரது கட்சியோ எந்த விதத்திலும் பொறுப்பல்ல எனவும் அறிவித்துவிடலாம்.
நமது ஒரே கவலை இப்போது என்னவென்றால் நமது 'தன்னலமற்ற' தலைவர்களை(பாருடா!மறுபடி மறுபடி சிரிச்சுகிட்டு நான் ஏதோ காமெடி பண்ற மாதிரி ஆயிடாது)எப்படியாவது காலணிகளிடம் இருந்து காப்பாத்திடனும் அவ்வளவு தான்.

3 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

செருப்புக்களுக்கான வியக்கியானங்கள்
நீள்கிறது தொடரட்டும்.
ஒதுக்கப்பட்டவை உயரும்.
நல்ல விகடம்.

கடைக்குட்டி சொன்னது…

நடுநடுவே உங்கள் கமெண்டுகள் அருமை...

அதுவே ஒரு பின்னூட்டம் மாதிரி இருந்தது.. நெறய எழுதுங்கோ!!! நாங்க படிக்கிறோம்ங்க.!!

நம்ம கட பக்கமும் கொஞ்சம் வாங்கோ!!
www.kadaikutti.blogspot.com

Unknown சொன்னது…

நன்றி கடைகுட்டி அவர்களே!உங்கள் ஆதரவு என்னை மேலும் எழுத துண்டுகிறது