திங்கள், 18 ஜனவரி, 2010

என் கவிதையின் கதை....


கவிதை எழுத வேண்டும்....
சரி! எதைபற்றி எழுதலாம்

‘காதல்..’வேண்டாம்! வேண்டாம்!
காகிதங்களே வெட்கும் அளவிற்கு
காதலித்துவிட்டார்கள்

‘இயற்கை..’வேண்டாம்! வேண்டாம்!
காலம்காலமாய் கவித்து அதையும்
காலாவதியாக்கிவிட்டார்கள்.

சரி! வேறு எதைப்பற்றி எழுத...

கவிதைக்கான கருவை யோசித்து
கண்கள் அயர்ந்தன...வார்த்தைகளை
தர மறுத்து தமிழும் என்னை
தனிமைபடுத்தியது.

நிலம் வாழும் மீனைப்போல்
என் நிலையானது.
கவிதை எழுத எடுத்த
காகிதமோ...
நான் வைத்த ‘ஒற்றை’ புள்ளியுடன்
என்னை கேலி செய்தது.

இயலாமை கோபமானது....
பேனாவையும்,காகிதத்தையும்
வீசி எறிந்தேன்!
கண்கள் மூடினேன்!
தூக்கம் பிடிக்கவில்லை.

திடீரென்று காற்றின் தாளம்
என் ஜன்னலில் கேட்டது
ஜன்னல் திறந்தேன்....

அங்கோ....

முகிலினங்கள் மாரியாய் மாறி
மண்ணை முத்தமிட்டு கொண்டிருந்தது...

இரை தேடிச் சென்ற எறும்பொன்று
மழையோடு போராடி
இரையோடு சுவரேறி கொண்டிருந்தது....

எனக்குள் ஏதோ ஒரு வெளிச்சம்!!!!

வேகவேகமாய் சென்று வீசியெறிந்த
பேனாவையும்,காகிதத்தையும்
கையிலெடுத்தேன்!

இப்போது....
அந்த ‘ஒற்றை’ புள்ளி....
“கவிதை எழுத வேண்டும்...”
என உருமாற துவங்கியது.

5 கருத்துகள்:

sarvan சொன்னது…

அருமை

கமலேஷ் சொன்னது…

நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள் தொடருங்கள்

Unknown சொன்னது…

நன்றி சர்வன்...

நன்றி கமலேஷ்...

காமராஜ் சொன்னது…

மாப்ளே.நல்ல கவிதை.தேடலின் அவசியமும் தேடலுக்கான கதவு திறக்கப்படுவதும் சொல்லப்பட்ட கவிதை.

கவி அழகன் சொன்னது…

அருமை வாழ்த்துக்கழ்த்துக்கள்...