சனி, 9 ஜனவரி, 2010

படிங்க....சிரிங்க...


கீழ் கண்டவைகள் படிப்பதற்கும்....சிரிப்பதற்கும் மட்டுமே!!!!!!!!! சமீபத்தில் எனக்கு வந்த ஒரு சில குறுஞ்செய்திகளின் தமிழாக்கத்தை நீங்கள் சிரிப்பதற்கு மட்டுமே தருகிறேன்.அநூபவித்து சிரியுங்கள்.....ஆராய்ச்சிகள் வேண்டாம்!!!!!!!!

****மனைவி: என்னங்க...! முதல்ல நம்ம கார் டிரைவரை(driver) வேலையை விட்டு நிறுத்துங்க.அவன் கார் ஓட்டுறேன் சொல்லி என்னை இரண்டு தடவ கொலை பண்ணப் பாத்துட்டான்...

கணவன்: சரி விடுமா! அவனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்....

****வங்கியில் கொள்ளையடிக்க வந்த திருடன் ஒருவன் வாடிக்கையாளர்களை நோக்கி,”இங்க நான் திருடுனதை யாராவது பாத்ததா சொன்னீங்க உங்கள கொன்னுடுவேன்...” என்று மிரட்டியபடி வாடிக்கையாளர் ஒருவரை பார்த்து,”ஏய்! நான் திருடுனதை நீ பாத்ததா சொல்லுவியா...?”

வாடிக்கையாளர்:”நான் சொல்ல மாட்டேன் ஆனா பயந்து போய் எம் பொண்டாட்டி சொன்னாலும் சொல்லுவா...”

****ரங்கா:”நீ ஏன் லாரிய பாத்தாலே பயப்படுற?”

சங்கர்:”நீ வேற...போன மாசம் எம் பொண்டாட்டிய ஒரு லாரி டிரைவர் கடத்திட்டு போயிட்டான்.எங்க அவன் திரும்பி வந்து எம்பொண்டாட்டிய எங்கிட்டயே விட்டிட்டு போயிருவானொன்னு ஒரே பயம்மா இருக்கு...அதான்...”

****ராஜா நடுராத்திரியில் எழுந்து தன் மனைவியிடம் கேட்டான்,”ஏம்மா! கொஞ்சம் கொஞ்சமா வலிய அனுபவிச்சு சாவுறது நல்லதா இல்ல...பட்டுன்னு போயிடுறது நல்லதா...?”

மனைவி:”சாவுன்னா பட்டுனு போயிடனுமுங்க...”

ராஜா:”அப்ப சரி நீ உன் இன்னொரு காலையும் தூக்கி எம்மேல போடு....”

****மனைவி:”ஏங்க! எப்படி உங்களால மட்டும் கவலையே இல்லாம இருக்க முடியுது...?”

கணவன்:”நான் எப்ப பிரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சுப்பன் எங்கவலை எல்லாம் பறந்து போயிடும்.”

மனைவி:”எம்மேல அவ்வளவு பிரியமா உங்களுக்கு...?”

கணவன்:”அதெல்லாம் ஒண்ணுமில்ல...உன்னவிட வாழ்க்கையில என்ன பெரிய பிரச்சனை எனக்கு வந்திட போவுதுன்னு நினைச்சுப்பேன்...”

****மனைவி:என்னங்க...! நான் இந்த சாமி படத்துக்கு பின்னால பத்திரமா வச்சிருந்த நூறு ருபாய எடுத்து என்ன செஞ்சீங்க?

கணவன்:அத எடுத்து எனக்கு ஒரு ஜட்டி வாங்குனேன் இது தப்பா?

மனைவி:இப்படித்தான் நீங்க எப்பவும் ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் செலவு செஞ்சு வைப்பீங்க....

கணவன்:..........???

****நீங்க எப்படி உங்க கணவரை இத்தனை பேருக்கு மத்தியில இந்த கப்பல்ல கண்டுபிடிச்சீங்க???

மனைவி:ரொம்ப சுலபம்ங்க!!! அந்த வெண்ண மட்டும்தான் முதுகுக்கு பின்னால பேராசூட் கட்டி இருந்துச்சு!!!!!

****டிராபிக் போலிஸ்:ஏம்பா!!! உன் பொண்டாட்டி உன் பைக்கில இருந்து விழுந்தது கூட தெரியாமலா வண்டி ஓட்டின?

கணவன்:அடக் கடவுளே!!!! எனக்கு தான் திடீர்ன்னு காது கேட்காம போயிருச்சோன்னு நினைச்சேன்!!!!

****மனைவி:நேற்று கூட்டத்துல உங்க பேச்சு ரொம்ப நல்லா இருந்துச்சுங்க...

தலைவர்:நான் நல்லா பேசி என்ன செய்ய அங்க வந்திருந்தவனுங்க எல்லாம்
முட்டாப்பயலுகளால்ல இருந்தானுங்க..

மனைவி: ஓ!!! அதான் என் அருமை உடன்பிறப்புகளே-ன்னு உங்க பேச்சை ஆரம்பிச்சீங்களோ!!!!!!

தலைவர்:..........!!!!!!!!!!!!!!!!!!!!

****ஜக்கு:ஏண்டா எப்பவுமே கல்யாண போட்டோல ஆம்பளைங்க வலது பக்கமாவும் பொம்பளைங்க இடது பக்கமுமாகவே இருக்குறாங்க????????

பப்பு:அது ஒண்ணுமில்லடா...வரவு செலவு நோட்டுல சொத்துக்கள் வலது பக்கமாவும் செலவினங்கள் எப்பவும் இடது பக்கமாவும் இருக்குறதில்லையா அது மாதிரி தான்....

****தோழி 1:ஏண்டி உன் இரண்டு புள்ளைகளுக்கும் ஒரே பெயரை வச்சிருக்கியே உனக்கு கூப்பிடுறதுக்கு கஷ்டமா இல்லை?????

தோழி 2:இதுல என்ன கஷ்டம் அதான் இரண்டு பேருக்கும் வேற வேற இன்ஷியல் வச்சிருக்கேனே!!!!!!

9 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

நான் தான் முதலாவதா? விழுந்து விழுந்து ....சிரித்தேன்

காமராஜ் சொன்னது…

அருமையான விகடத்துணுக்குகள். சிரிக்க வைத்துவிட்டாய் முழுவதும் சிரிக்கமுடியவில்லை. அதற்கு காரணம் உனக்குத்தெரியும்.

Unknown சொன்னது…

நன்றி நிலாமதி...

மாமா இதுவும் கடந்து போகும்...இதையும் நான் உங்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்...

பா.ராஜாராம் சொன்னது…

ஹா..ஹா..ரொம்ப ரசிச்சு சிரிச்சேன் அன்டோ!

அப்புறம்,மகன் பிறந்ததற்கு சந்தோசமும் வாழ்த்துக்களும் மக்கா!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

**மனைவி: என்னங்க...! முதல்ல நம்ம கார் டிரைவரை(driver) வேலையை விட்டு நிறுத்துங்க.அவன் கார் ஓட்டுறேன் சொல்லி என்னை இரண்டு தடவ கொலை பண்ணப் பாத்துட்டான்...

கணவன்: சரி விடுமா! அவனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்....//

படித்தேன் சிரித்தேன்..

Unknown சொன்னது…

குணா!உங்கள் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி...நான் எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பிஸியோதேரபி காலேஜில் தான் படித்தேன்.

நீங்கள் கே.எஸ்.ஆர் காலேஜ் விரிவுரையாளர் என தெரிந்தவுடன் எனது பழைய நினைவுகள் மீண்டன...நன்றி...

thiyaa சொன்னது…

படிச்சிட்டேன் .... சிரிச்சுப்புட்டேன்...
அருமை

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜாராம்...

நன்றி தியா...

Joe சொன்னது…

சிரிக்க வைத்த நகைச்சுவைத் துணுக்குகள்!

கலக்குங்க!