திங்கள், 10 ஆகஸ்ட், 2009

என்னை தேடும் நான்...


உள்ளம் குமைந்து கொண்டிருக்கிறது
ஆசைக்கும் யதார்ததிற்குமான இடைவெளியில்.......

விண்ணில் பறக்க வானவில் உதவுமா?-என
சோளி போட்டு சோதிடம் பார்க்கிறேன்

கண்ணீர் துடைக்க கைகள் வேண்டி
கல்லறைச் சுவர்களில் கறைந்து போகிறேன்

வாழ்வை காண வெளிச்சம் வேண்டி
இரவல் விடியல் கேட்கிறேன்

செய்து முடித்த தவறுகளை திருத்த
கடந்து போன காலம் வேண்டுகிறேன்

மறந்து போன பாதை தேடி
பயணம் செய்ய பார்க்கிறேன்

சொல்லி முடித்த சொற்களை அள்ளி
சொப்பனமாய் மாறச் சொல்கிறேன்

மண்ணில் விழுந்த மழைதுளியை-மீண்டும்
ஒருமுறை நனைக்க நினைக்கிறேன்

காலம் கடந்த ஞானம் கண்டும்
முடிவின் முடிவில் -ஒரு
தொடக்கம் தேடுகிறேன்.....

6 கருத்துகள்:

Joe சொன்னது…

நல்ல கவிதை.

படத்தை நடுவில் போட்டிருந்தால் சில வரிகள் கோணலாக வரமால் இருந்திருக்கும்.

காமராஜ் சொன்னது…

நல்லாயிருக்கு மாப்ளே.
வார்த்தைகளும் வரிகளும் சிக்கனமன
வடிவில் கவிதை கவனம் பெறுகிறது.

Unknown சொன்னது…

நன்றி ஜோ! மாற்றங்கள் செய்துவிட்டேன்...

நன்றி மாமா....

மாதவராஜ் சொன்னது…

கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டே...
வாழ்த்துக்கள்.

மாதவராஜ் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

நன்றி அண்ணா!