வியாழன், 13 ஆகஸ்ட், 2009

விடியலை தேடி...


விடியலுக்கான ரேகைகள் வானில் படர்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் நகரம் இன்னும் விழிக்கவில்லை.
ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் எனக்கு முன்னால் ஒருவர் என்னைப்போல் நடைபயிற்சியில் இருந்தார்.
முதுமையின் காரணமாக அவரது நடையின் வேகம் சற்று நிதானமாகவே இருந்தது.
அதனால் ஒரு நிமட நடையிலே அவரை கடந்துவிட்டேன்.

சரி! தனியாக நடப்பதைவிட அவரிடம் பேசிக்கொண்டே நடக்கலாம் என தோன்றியதால் சற்று நிதானித்து அவரை என்னிடம் நெருங்க வைத்தேன்.முதுமையின் தளர்ச்சி அவரது நடையில் மட்டுமல்லாமல் முகத்திலும் பரவியிருப்பதை காண முடிந்தது.

“ஐயா! இதுக்கு முன்னாடி உங்கள இந்தப் பக்கம் பார்த்ததில்லையே!...இப்பத்தான் மொத தடவையா இந்தப்பக்கம் வாக்கிங் வாரீங்களா...?”

“அடடே!... தம்பி கரெக்டா சொல்லிட்டீங்களே நீங்க ரெகுலரா இந்தப்பக்கம் நடக்குறவர் போல அதான் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க...”

“ஆமாய்யா! வேற ஏரியாவுல எங்கயும் இதுக்கு முன்னாடி வாக்கிங் போனதில்லையா.....?”

“இல்லைய்யா! சொன்னா நம்ப மாட்டீக நான் பொறந்ததுல இருந்து இன்னூ வரைக்கும் விடியலை பார்த்ததே இல்லன்னா பார்த்துக்கோங்களேன்...”

“அப்படீன்னா இப்ப என்ன திடீர்ன்னு......?”

“அத ஏன் கேக்குறீங்க தம்பி நின்னது நிக்க நேத்து திடீர்ன்னு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டேன்...இதுவரைக்கும் அப்படி ஆனதே இல்ல எம்புள்ளைவளும் பதறி அடிச்சு என்ன ஆஸ்பத்தரிக்கு கூட்டிட்டு போச்சுங்க அங்க.... தெரியாதா நம்ம டாக்டர்மாருகள பத்தி அந்த டெஸ்டு எடு இந்த டெஸ்ட் எடுன்னு சொல்லி நல்லா கறந்திட்டு...சக்கரவியாதி இருக்கு,ரத்த அழுத்தம் இருக்கு அப்படி இப்படீன்னு ரொம்ப பயமுறுத்திட்டாங்க.....அதான் இப்புடி....”

“என்னையா இது மொதல்லே கவனமா இருந்திருந்தா அப்படியெல்லாம் ஆயிருக்காதில்லையா...”

“என்ன தம்பி செய்ய பட்டாதானே புத்தி வருது...இல்லனா நம்ம பாட்டுக்கு தானே நாம அலைவோம்...என்ன சொல்றீங்க...?”

“அதுவும் சரிதான்...ஐயா! உங்கப் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா...?”

“எம் பேரு ’சுதந்திரம்’ தம்பி......!”

5 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

சின்ன துணுக்கு போல இருந்தாலும், செய்திகளும் இருக்கின்றன. தொடர்ந்து எழுது தம்பி.

☼ வெயிலான் சொன்னது…

“ஐயா! இதுக்கு முன்னாடி உங்கள இந்தப் பக்கம் பார்த்ததில்லையே!...இப்பத்தான் மொத தடவையா இந்தப்பக்கம் வாக்கிங் வாரீங்களா...?”

:) நானும் இப்பத்தான் இந்தப்பக்கம் வர்றேன்.

Unknown சொன்னது…

நன்றி அண்ணா!உங்கள் வருகைக்கு நன்றி வெயிலான்!

காமராஜ் சொன்னது…

கொரில்லா தாக்குதல்.

நானும் கூட அவர்
தாத்தாதானேன்னு
எளக்காரமா நெனச்சுட்டேன்.

தாக்கு மாப்ளே.

Unknown சொன்னது…

நன்றி மாமா...