வியாழன், 21 மே, 2009

நான் பேசுகிறேன்......


நாம் இப்படித்தான்.........

****இரு சக்கர வாகனங்களில் செல்லும் முன் பின் தெரியாத நபர் வண்டியில் சைடு ஸ்டாண்ட் போடாமல் சென்றால் அலறி அடித்துக்கொண்டு எச்சரிக்கை செய்வோம்.லைட்டு போட்டுக் கொண்டு எவனாவது பகலில் வண்டி ஓட்டினால் கையை மடக்கி விரித்து மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு அவன் தான் காரணம் என்பது போல் பொதுச் சேவை செய்வோம்.ஆனால் அவனே எங்காவது அடிபட்டு விழுந்தாலோ அல்லது உயிருக்கு போராடினாலோ சந்தடியில்லாமல் இடத்தை காலி செய்வோம் நமக்கு ஏன் வீண் வம்பு என்று.

****ஊரல்லாம் லஞ்சம்,ஊழல் என்று புலம்புவோம்.ஆனால் நமக்கு அல்லது நமது பிள்ளைகளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால் எவ்வளவு ஆனலும் சரி காரியம் நடந்தால் போதும் என்று கொடுக்க வேண்டியதை கொடுத்து நடக்க வேண்டியதை நடத்துவோம்.இதுல நாயகன் கமல் ரேஞ்சில் அவங்களை மாறச் சொல்லுங்க நான் மாறுகிறேன் ஞாயப் படுத்தவேற செய்வோம்.(எழுதுற நானும் இதில் விதிவிலக்கல்ல!)

****வாய் கிழிய மனித நேயம் பேசுவோம்.நம்மை தவிர நாட்டில் உள்ள அனைவருமே ஈவு இரக்கம் எதுவும் இல்லாதவர்கள் என்றும் நாம் தான் இந்த சுயநல நாட்டில் பிழைக்க தெரியாதவர்கள் என்றும் நம்மை நாமே இகழ்புகழ்ச்சி செய்து கொள்வோம்.ஆனால் பேருந்தில் இடம் போடுவதற்காக கை குட்டையிலிருந்து கோமனம் வரைக்கும் தூக்கி போட்டு இடம் பிடிப்போம்.(அரசியல்வாதிகளெல்லாம் நம்மிடம் தோற்றுப்போகும் அளவிற்க்கு).
அதே போல் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் பயணி அசதியில் நம்மீது தூங்கி விழுந்தால் அவ்வளவு தான் மனித நேயம் பொங்கப் பொங்க அவன் மயிரை ஆய்ந்து அவனை துன்புறுத்துவோம் தவறு துகில் களைப்போம்.(இதில் கை முட்டை கொண்டு இடிப்பது, நாக்கை பிடிங்கிக் கொண்டு சாவது போல் அவனை வார்த்தைகளாலே வறுத்தெடுப்பது என பல விதங்கள் உண்டு)

****அரசியல்வாதிகளைப் பற்றியும்,அரசு இயந்திரங்களைப் பற்றியும் ஆயிரம் குறைகள் சொல்வோம்.ஆனால் நாம் பொது இடத்தில்தான் மூத்திரம் போவோம். நடு ரோட்டில் தான் எச்சில் துப்புவோம்.கோபம் வந்தால் அரசாங்கப் பொருட்களை தான் சேதப்படுத்துவோம்.தண்ணி அடித்துவிட்டுத்தான் வண்டி ஓட்டுவோம்.

****தனி மனித உரிமை பேசுவோம்.ஆனால் நமது கவலைகளும்,கோபங்களும் எப்போதும் நமது ஆசைகளையும் ,சுயதேவைகளையும் பொறுத்தே எழும்.தனி மனித ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டதாக புலம்புவோம்.உலகம் நிறைய மாற வேண்டி உள்ளது என கருத்துரைப்போம் ஏன் கவலை கூட கொள்வோம்.ஆனால் எந்த ஒரு சிறு மாற்றத்திற்க்கும் நாம் நம்மை உட்படுத்த மாட்டோம்.

****அடுத்த வீட்டில் எழவு விழுந்தால் அது செய்தி ஆனால் அதுவே நம் வீட்டில் என்றால் அது மீளாத் துயர்,துக்கம்.
அப்படித்தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்.

****நாம் நிழலை நிஜமாய் கொள்வோம். நிஜங்களை மௌனத்தால் கொல்வோம்.ஆனால் என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவன் வருவான் நம் நாட்டில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருவான் என தீர்க்கமாய் நம்புவோம்.கண்களை இறுக மூடிக்கொண்டு விடியல் காண துடிக்கும் குடிகாரன் போல்.

தனி மனித மாற்றங்களால் இந்த சமூகம் மாறுமா?

புள்ளிகள் சேர்ந்து கோடாவது போல் தனி மனிதர்கள் சேர்ந்தே சமூகம் உருவானது.அதனால் தனி மனித மாற்றங்களால் சமூக மாற்றம் ஏற்படுத்த முடியும்.
மாற்றங்கள் வேண்டி தலைவர்கள் தேடி காத்திருப்போரே!வாருங்கள் எந்த மாற்றமும் தானாய் வருவதில்லை நாமாய் ஏற்படுத்தும் வரை.

சுட்டால்தான் நெருப்பு!
சுற்றினால்தான் பூமி!
போராடினால்தான் மனிதன்!-ஆம் மாற்றங்கள் வேண்டி போராடுவோம்.

8 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

தம்பி!

மாற்றங்கள் தானாக வராது என்பது பெரிய உண்மை.
தனிமனிதர்கள் மாறுவதால் மட்டும், மாற்றம் வந்துவிடாது என்பது உண்மை.

Unknown சொன்னது…

அண்ணா!

ராஜ போக வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தனின் தனி மனித மாற்றம் பௌத்தம் தந்தது முதல்.....
ஈரோட்டு சந்தை வியாபாரியான ராமசாமியின் தனி மனித மாற்றம் திராவிடம் தந்தது வரை உள்ள வரலாறுகளை நாம் மறுக்க முடியாதல்லவா?

காமராஜ் சொன்னது…

விபத்து நடந்த இடத்தில் தானே நுழைந்து
எந்தப்பிரதியுபகாரமும் பாராமல்
கடைசிவரை கூட இருக்கும் மானாவரி மனிதர்கள்
நிறைய்ய இருக்கிறார்கள். அவர்கள் எந்த வலைக்குள்ளும்
சிக்காதவர்கள். அப்புறம் சூப்பர்.

Unknown சொன்னது…

உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி மாமா.

Joe சொன்னது…

அருமையான பதிவு, அன்டோ!

இங்கே குறிப்பிட்ட விஷயங்களை நான் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன், நீங்கள் செய்யாமல் இருந்தால் இந்த நாடு முன்னேறும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Unknown சொன்னது…

உங்கள் கருத்துரைக்கு நன்றி ஜோ! நான் ஏற்றுக்கொள்கிறேன்.

Jude Rayar சொன்னது…

khg;gp;s;is

cq;fspd; “ehd; NgRfpNwd; midtu; kdjpYk; cs;s ,ul;il vz;zq;fis gpujpgypf;fpwJ. ehk; midtUk; epidg;gJ xd;W elg;gJ xd;Wkhf ( ky;bgpy; ngu;rdhypl;b ) tho;e;J nfhz;bUf;fpNwhk;.

khu;f;i] Nghy vdf;Fk; xU ek;gpf;if cz;L. mJ “ ghl;lhsp tu;f;fj;jhy; kl;LNk khw;wq;fs; Vw;glr;nra;a KbAk;” vd;gJ.

ghl;lhsp tu;f;fk; jdpkdpj khw;wj;ij epr;rrakha; cUthf;fp nfhz;bUf;fpwJ vd;gij ehd; ek;GfpNwd;.

njhlul;Lk; cq;fspd; rKjha khw;wk; ,ijg; Nghy jdp kdpkdpj khw;wq;fspd; thapyhf.

ed;wp

cq;fs;

kr;rhd;

R+L

Jude Rayar சொன்னது…

Mapillai

I could see the dual thoughts of the human in your “ Naan Paesugirane”. We are living like a multiple personalities as you correctly said.


I have a hope like marx’s “Changes comes through only the working category”

I am sure that working class surely gives the individual’s change.

We put forth our effort to the community change through the individual’s change


Evr
Ur
Luving
Much on

Zoodo