வியாழன், 14 மே, 2009

நாங்க ஸ்கூலுக்கு போறோம்.....!



ஜனநாயகம்!

மக்களால் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நன்நாள் தேர்தல் நாள்!....

அப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்காக தொண்டு செய்வதே! அரசியலாகும்!......

அரசியல் செய்வோருக்கு அரம் தவறு அறம் கூற்றாகும்!.....

மக்களுக்காக தொண்டு செய்வதற்காகவே அரசியல் செய்பவர்கள் தான் நமது அரசியல்தலைவர்கள்!...

தனது நலத்தைவிட பொது நலமே தனக்கு முக்கியம் என்று செயல்படுபவர்கள் தான் நமது அரசியல் தலைவர்கள்!..........

இப்படிப்பட்ட அற்புதமான ஒரு அமைப்பையும் நல்ல வழிகாட்டிகளையும் நமக்கு கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார்கள்!.........

வாழ்க ஜனநாயகம்! வளர்க நம் நாடு!

(குறிப்பு: .மேலே நீங்கள் படித்தது, எங்க கிளாஸ் சாரு! நாளைக்கு கேள்வி கேட்பதாக சொன்ன வீட்டுப்பாடத்தை உங்களிடம் ஒப்பிச்சேன் அவ்வளவுதான்.... என்னடா.. இது என்று யாரும் குழப்பம் அடைய வேண்டாம்....உங்களுக்கு மட்டும் ஒரு உண்மையை சொல்கிறேன்! நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக நான்,எங்க அப்பா ,எங்க தாத்தா,பாட்டி எல்லாரும் போயிருந்தோம் .அங்க எங்களுக்கு 18வயது இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் அதனால் நாங்கள் வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் அதிகாரி சொல்லிவிட்டார்.
அதனால் மற்றற்ற மகிழ்ச்சிக்கு ஆழான நாங்கள் மீண்டும் பள்ளிக்கு படிக்க சென்றுவிட்டோம்!
படிக்கற வயசுல படிக்காம வோட்டுப் போடப்போனது தப்புதானே.....? என்ன சொல்றீங்க.....?)

4 கருத்துகள்:

Vishnu - விஷ்ணு சொன்னது…

// பள்ளிக்கு படிக்க சென்றுவிட்டோம்!
படிக்கற வயசுல படிக்காம வோட்டுப் போடப்போனது தப்புதானே //


நக்கல்ஸ்

Unknown சொன்னது…

நன்றி விஷ்ணு.

அன்புடன் அருணா சொன்னது…

//படிக்கற வயசுல படிக்காம வோட்டுப் போடப்போனது தப்புதானே.....? என்ன சொல்றீங்க.....?)//

அது சரி!!!!
அன்புடன் அருணா

Unknown சொன்னது…

நன்றி அருணா மேடம்.