புதன், 21 செப்டம்பர், 2011

பிடுங்கப்பட்ட சுதந்திரம்……


குழந்தை பல்பத்தை தன்

எச்சிலால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது

நான் கோபமாக பல்பத்தை அதனிடமிருந்து

பிடுங்கி எறிந்தேன்

குழந்தை அழ ஆரம்பித்தது……..

நான் ஏதேதோ சமாதானம்

சொல்லிப் பார்த்தேன் ஆனால்

அது தன் அழுகையை நிறுத்துவதாயில்லை

வேறு வழியின்றி மீண்டும்

பல்பத்தை அதன் கையில் கொடுத்தேன்

இப்போது……..

பல்பத்தை வாங்கிய குழந்தை அதை

தரையில் வீசியெறிந்தது

அப்போது தான் எனக்கு உரைத்தது

நான் அதனிடமிருந்து பிடுங்கியது

பல்பத்தை அல்ல……..

அதன் சுதந்திரத்தை என்று!!!!!!

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கவிதை மிக அருமை ...நண்பரே...

நிலாமதி சொன்னது…

குழந்தை கற்றுத்தந்த பாடம் . குறுங் கதை ஆயினும் பாடம் பெரியது. பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

தங்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி ரெவெரி..........

அஹா எத்தனை நாட்கள் ஆயிற்று.....? தோழர்.நிலாமதி தங்களது வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி!!!!!!!! yes!!! CHILD IS THE FATHER OF MAN.......

vimalanperali சொன்னது…

பளிச்,,,,

சீனுவாசன்.கு சொன்னது…

நம்ம தளத்துக்கும் வாங்க!
தயங்காம கருத்த சொல்லுங்க!
நல்லாப்பழகுவோம்!

சீனுவாசன்.கு சொன்னது…

மாமியார் ”பிச்சை கிடையாது என்பதை நான் தான் சொல்ல வேண்டும்”என்ற கதை தெரியும்தானே?...