வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சிரிங்க ப்ளீஸ்...


எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே...

***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான்.
ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள்.
உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள்.
திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி.

***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?

மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்கடைக்காரனுக்கு 150 முத்தம், வீட்டு ஓனருக்கு 250 முத்தம்ன்னு பிரிச்சு கொடுத்துடுறேன். சரிதானே..?

கணவன்: ?????

***ஒருவன்: டாக்டர் சார், மரணமே இல்லாம வாழ்றதுக்கு ஏதாவது வழியிருக்கா?

டாக்டர்: அதுக்கு நீங்க கல்யாணம் தான் பண்ணிக்கனும்.

ஒருவன்: என்னது கல்யாணம் பண்ணிட்டா மரணமே இல்லாம வாழ வழி கிடைக்குமா?

டாக்டர்: நீங்க வேற...அப்பத்தான் இப்படிப்பட்ட விபரீதமான எண்ணங்கள் வராது.

***ஒருவன்: சார். என்னோட பொண்டாட்டிய காணோம்.

போஸ்ட்மாஸ்டர்: யோவ் இது போஸ்ட் ஆபீஸ் யா..போயி போலிஸ் ஸ்டேஷன்ல புகார் கொடு.

ஒருவன்: அய்யோ...சந்தோசத்துல எங்க போறதுன்னே தெரியாமபோச்சே!!!

***மனைவி: நான் இப்படியே உங்களுக்கு சமைச்சு கொட்டிக்கிட்டே இருந்தா எனக்கு என்ன கிடைக்க போவுது?

கணவன்: ஆங். என்னோட இன்ஷுரன்ஸ் பணம் கிடைக்கும்...சீக்கிரமா...

***நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?
வீட்டிலிருப்பவனை ஒயின் ஷாப்பிற்கு போகவைப்பது காதல்.
ஒயின் ஷாப்பிலிருந்து தள்ளாட்டமாய் திருப்பி வீட்டிற்கு கூட்டி செல்வது நட்பு.

***அப்பா: டேய்! ஏண்டா இப்படி அழுவுற..?

மகன்: அம்மா அடிச்சிட்டாங்க...

அப்பா: இதுக்கா அழுவுற.ச்சீ அழாத...

மகன்: யோவ் போயா...உன்ன மாதிரியெல்லாம் என்னால அடிதாங்க முடியாது.

அப்பா: ????

4 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

அடடா நீயுமா இந்த லிஸ்ட்ல சேந்துட்ட மாப்ள.

தயவு செய்து கேலிக்காகக்கூட பெண்களை கீழிறக்கி எழுத வேண்டாம்.

சிரிப்புத்தானே என்கிற மழுப்பல் கெட்டிப்பட்டுப்போகும். அதுவே நிஜமாகியும் திரியும்.

பட்டது...

உன்னிடம் வேறு எழுத்தை எதிர்பார்க்கிறேன்.

நிலாமதி சொன்னது…

நன்றாக ரசித்து சிரித்தேன்..........நன்றி .

ஞாஞளஙலாழன் சொன்னது…

>அடடா நீயுமா இந்த லிஸ்ட்ல >சேந்துட்ட மாப்ள.

>தயவு செய்து கேலிக்காகக்கூட >பெண்களை கீழிறக்கி எழுத >வேண்டாம்.

உண்மையிலேயே காமராசர் தான்.

Unknown சொன்னது…

மாப்பு, இந்த முறை யாரிடம் குறுந்தகவல்களை திருடினாய்?.
நகைசுவை தோரணம் கட்டிருக்கிறாயே?

- முத்துக்குமார், கொச்சி.