வியாழன், 27 மே, 2010
என் ஜீவன்...
சுற்றும் பூமியிலிருந்து சற்றே விலக செய்து
அவனை சுற்றி வரவிட்டான்....
என் சிந்தனைகளை சிறைபிடித்து அவனைதாண்டி
படராமல் பார்த்துக்கொண்டான்....
என் இரவுகளை பகலாக்கி
எனது பகல்களை இரவுகளாக மாற்றிவிட்டான்....
தன் பொக்கைச்சிரிப்பில் என்னை மயங்கவைத்து
அவன் என் கைகளை கட்டிவிட்டான்....
தன் பிஞ்சுக்கால்களை என் நெஞ்சில் உதைத்து
என்னை அவன் அடிமையாக்கிக்கொண்டான்....
என் விரைத்த மார்பில் அவன் கழித்த சிறுநீர்தான்
என்னை இளக செய்ததோ...?தெரியவில்லை...ஆனால்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றிக்கொண்டும் வருகிறான்....
என்னை கடித்த எறும்பை கூட மெல்ல பிடித்து
தரையில் விடுகிறேன்...பத்திரமாக தன் குட்டிகளுக்கு
இரையெடுத்து செல்லட்டுமென....
வேகமாக வந்து என்னை மோதுவது போல்
கடந்து சென்றவனையும்...ஆத்திரப்படாமல் பார்த்து சிரிக்கிறேன்
என்னைப் போல் அவன் தன் பிள்ளையை காணச் செல்கிறான் என...
இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்....
இந்தப் புரிதலும்,பொறுமையும் எனக்கு கூட சாத்தியமா?
என என்னையே நான் வியக்கிறேன்..
’பெற்றவள் சொல்லி கேட்காத நீ உன் பிள்ளையிடம் அடங்கிப்போவாய்..’என
எப்போதோ என் அன்னை விட்ட சாபம்
இப்போது இன்பமாய் பலிக்கிறது.
இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம்...என
என் உலகையே தனதாக்கி கொண்டு என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்துவிட்டான்.....என் ஜீவன்...!!!!!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
//இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம்...என
என் உலகையே தனதாக்கி கொண்டு என்னை முழுவதுமாய்
ஆக்கிரமித்துவிட்டான்....//
அருமை . வாழ்த்துக்கள்
ஹை.. குட்டி மாப்ள.
இருண்ட காலத்தின் பாடல்கள் எதைப்பற்றி இருக்கும்.
இந்த காலங்களில் அவன் தான் உன்னை இன்னும் அதிகமாக ஆக்ரமித்திருக்கிறான்.
நெஞ்சில் ஒன்னுக்கிருந்த குட்டிப்பயலின் நினைவு
கவிதையாய் விரிகிறது.
இப்டீ.. இதையாவது எழுது.
இந்த பதிவெழுத காரணமான குட்டிப்பயல்தான்,
இவ்வளவு நாட்கள் பதிவு எழுதாததுக்கும்
காரணமா ?
கை,கால் முழைத்த புஷ்பம்.பார்ப்பது
சந்தோஷமே எப்போதும்.
சிறுநீரின் சூடு நம்மை மகிழ்ச்சிப் படுத்தி களம் விரிக்கும்.
வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக