புதன், 4 நவம்பர், 2009

வேற்றுமையில் ஒற்றுமை....



ஊனமுற்றவன்....

லஞ்சமாக வாங்கிய பணத்துடன்
பேருந்தில் ஏறி அமர்ந்தான் ஊனமுற்றோருக்கான இருக்கையில்...

கல்வித்தந்தை...

பெயர் போன தனது மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டிய ஏழை மாணவனுக்கு அவனது குடும்ப நிலை உணர்ந்து.....!!!!
இருபது லட்ச ரூபாயை இரண்டு தவனையில் கட்டுவதற்கு தாராளம் காட்டினான்.....
அந்த அறக்கட்டளை நிர்வாக குழுமத்தின் தலைவன்.

பட்டதாரி....

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனது தந்தையின் உதிரத்தில் விளைந்த விளைநிலத்தை அடகுவத்தான்.
வந்த பணத்தில் விசா வாங்கி விமானம் ஏறினான்.
வானில் பறக்கையில் அவனுக்கு பூமி சிறுக்கத் தொடங்கியது.....

கைமாறும் காந்தி....

காந்தி சிரிக்கும் நோட்டை கொடுத்து ஓட்டுவாங்கினான்.
கோட்டைக்குப் போனான்.
ஓட்டு போட்டவன் மனு கொடுக்க கோட்டைக்கு போனான்.
மனுவை பெற்றவன் அவன் கையிலிருந்த சிரிக்கும் காந்தியை சுட்டிகாட்டினான்.
காந்தி சிரித்தபடி மீண்டும் கைமாறினார்.

என்னைப் போல் ஒருவன்....

விபத்துக்குள்ளாகி ரத்த சகதியில் விழுந்த கிடந்தவனை கண்டு
படபடப்போடு வேகமாக விரைந்து சென்றான்......வீட்டிற்கு!

2 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

ஏனையவர்மீது கோபம் இருக்கிறது. என்னைப்போல ஒருவன் மட்டும் நக்கலாகக் கடந்து போகிறான்.

ஜீவி சொன்னது…

//லஞ்சமாக வாங்கிய பணத்துடன்
பேருந்தில் ஏறி அமர்ந்தான் ஊனமுற்றோருக்கான இருக்கையில்...//


அட்டகாசமான வரிகள்.
யோசிக்க யோசிக்க நிறைய அர்த்தங்களைக் கொடுக்கும் வரிகள்.