சனி, 9 ஜூலை, 2011

இருக்கிறதா சமூகம் இன்னும்?


புத்தகப் பையைக் களவாடிக் கொண்டு
யார் எடுத்துச் சுமத்தியது
உன் தோள்களில் அந்த மண்வெட்டியை ?
கழுத்து சுற்றிப் புரளும் அந்தக் கைத்துண்டு
வேலையிடத்தின் ஐ டி அட்டையா?

காய்ப்பேறத் தயாராகும்
அந்தப் பிஞ்சுக் கரங்களில்
சேகரிக்கப் போவது
அடுத்த தலைமுறைக்கான வறுமையையா...

ஆர்வமோ, அச்சமோ, ஏக்கமோ
இன்னதென்று அறியமாட்டாதபடி
அப்பாவியாகவே உற்றுப் பார்க்கும்
அந்த ஒரு ஜோடி கண்கள்
இன்னும் கொல்லவில்லையா இந்த சமூகத்தை?


- எஸ் வி வேணுகோபாலன்