புதன், 16 செப்டம்பர், 2009

ஊனம் என்றால் என்ன..?

ஊனமென்பது யாதெனில்.....
மங்கிய ஒளியும் இருண்ட பார்வையும்
கொண்டோரல்ல குரூடர்-மாறாக
கெட்டவை கண்டும் காணா செருக்குடன்
கடந்து செல்வோர் குரூடர்!

ஊனமென்பது யாதெனில்.....
மௌனம் உடைத்து வார்த்தைகள் தொடுக்க
முடியாதவரல்ல ஊமை-மாறாக
உள்ளதை சொல்ல உள்ளம் நடுங்கி
உண்மையை மறைப்போர் ஊமை!

ஊனமென்பது யாதெனில்....
ஒலிகள் உணரா செவிகள்
கொண்டோரல்ல செவிடர்-மாறாக
சக உயிரின் ஓலம் கேட்டும்
உயிர் துடிப்பற்றிருப்பர் செவிடர்!

ஊனமென்பது யாதெனில்.....
கைகள் நலிந்து கால்கள் இழந்தவருக்கல்ல
ஊனம்!-மாறாக
கடமையை செய்ய காசுக்காக நீளும் கரங்களும்,
கண்ணியமற்று திரியும் கால்களும்
கொண்டிருப்போரே ஊனமுற்றோர்!

9 கருத்துகள்:

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

பல நேரங்களில் குருடாய், செவிடாய், ஊனமானவனாய், நான் இருந்திருக்கிறேன் என்பதை நினைவு கூர்ந்து வெட்கப்படுகிறேன்.

அன்புடன்
ஆரூரன்

thiyaa சொன்னது…

//
ஊனமென்பது யாதெனில்....
ஒலிகள் உணரா செவிகள்
கொண்டோரல்ல செவிடர்-மாறாக
சக உயிரின் ஓலம் கேட்டும்
உயிர் துடிப்பற்றிருப்பர் செவிடர்!

//
அருமை

மாதவராஜ் சொன்னது…

ம்.... வார்த்தைகள் தெளிவாய் வந்திருக்கின்றன! எழுது தம்பி....தொடர்ந்து...

காமராஜ் சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.

அண்ணாதுரை சிவசாமி சொன்னது…

வாஸ்தம்தான் தம்பி

Unknown சொன்னது…

நன்றி ஆருரன் விசுவநாதன்...

நன்றி தியா...

நன்றி அண்ணா!

நன்றி மாமா...!

நன்றி அண்ணாதுரை சிவசாமி...!

+Ve Anthony Muthu சொன்னது…

ஆஹா! மிக மிக அருமையான கருத்துள்ள கவிதை நண்பரே.

வாழ்த்துக்கள்.

+Ve Anthony Muthu சொன்னது…

ஆஹா! மிக மிக அருமையான கருத்துள்ள கவிதை நண்பரே.

வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

வழக்கமான வாழ்த்து பின்னூட்டம் என்றே நினைத்து பதிலுரைக்க நினைக்கையில் புதியவர்கள் வருகையில் உங்களை பார்த்தேன்.உங்களைப்பற்றிய உங்களது குறிப்பை படித்த போது தான் புரிந்தது உங்களது வாழ்த்து எவ்வளவு உள்ளார்ந்தமானது என்று. நன்றி தோழா...!உங்களது தன்னம்பிக்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

சுற்றும் வரை பூமி!
சுடும் வரை நெருப்பு!
போராடும் வரை மனிதன்!
நாம் மனிதர்கள் போராடுவோம்!